2 இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை….. இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள் Make The Valley Full of Ditches 53-06-09 கானர்ஸ்வில்லே, இந்தியானா, அமெரிக்கா அந்த காரியங்களைப் பற்றி கேட்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்களும் கவனித்துப் பாருங்கள், நான் இங்கிருந்து சென்றவுடன், பல நாட்களுக்கு பிறகு, ஊழியக் காரர்களாகிய உங்களிடம் உங்கள் சபைகளில், ஜனங்கள் வந்து “உங்களுக்கு தெரியுமா, அது என்னை விட்டு சென்று விட்டது” என்று கூறுவதை கேட்பீர்கள். அவர்களில் அநேகரை என்னால் அழைக்க முடியவில்லை. அவர்கள் மீது அது தொங்கிக்கொண்டிருப்பதை நான் காண்கிறேன், ஆனால் இங்கே இடையிலோ, இங்கே மேடையில் யார் நின்றாலும், இங்கே இடையிலே இருளான இடமாயிருக்கிறது. சில நேரங்களில், அது நகர்வதை நான் காண்கிறேன், ஆனால் என்னால் அந்த நபரை சரியாக பார்க்க முடியவில்லை (உங்களுக்கு புரிகிறதா?). மேலும் அதிலும் குறிப்பாக நீங்கள் அபிஷேகத்திற்கு கீழே இருக்கும்போது, நீங்கள் - நீங்கள் அதைப் பார்ப்பதில்லை. அது துரிதமாக செயல்படவில்லையென்றால், ஏன், அது வேறெங்கோ ஓரிடத் திற்கு நகர்ந்துவிடும். உங்களுக்கு புரிகிறதா? பின்பு நான் இங்கே இந்த மேடையின் மீது நின்றுகொண்டிருக்கையில், அது இங்கே இருக்கும் போது நான் அதை உணருகிறேன், பின்பு அது வெளியே சென்று விடுகிறது. அது தொங்கிக் கொண்டிருப்பதை நான் பார்த்து, அதை கவனிப்பேன், அது யாரோ ஒருவர் மீது தொங்கிக்கொண்டிருக்கும். உங்களுக்கு புரிகிறதா? மேலும் அப்போது ஒரு - ஒரு தரிசனம் திறந்தளிக்கப்படும். இங்கேயும் அல்லது வேறெங்கேயும் இந்த வரிசையில் ஒருபோதும் நின்றிராத அநேக, அநேக ஜனங்கள் இங்கே சுகமடைந்து இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அவர்களை நான் இங்கே இந்த - இந்த மேடையிலிருந்து அழைத்துக்கூட இருக்கமாட்டேன். வழக்கமாக, ஆராதனையின் கடைசியில், நான் சற்றே தொடங்குவேன்... சில நேரங்களில் ஒரு மகத்தான விசுவாச அமைப்பு (class of faith) அப்படியே எல்லாவிடங்களிலும் நகர்ந்து செல்வது போன்று அது இருக்கிறது. உங்களுக்கு புரிகிறதா? அவர்களில் அநேகர்அதை ஏற்றுக்கொள்கிறார்கள். பாருங்கள்? உங்களுடைய சுகமளித்தலை பொறுத்தவரை, ஏன், கிறிஸ்து அவர்களுக்காக மரித்தபோதே ஒவ்வொருவரையும் சுகப்படுத்திவிட்டார் என்பதை நான் அறிவேன். உங்களுக்கு புரிகிறதா? எனவே அதை விசுவாசிக்கும் படியான உங்களுடைய சுவாசம் அதுதான் ஒரே காரியமாக இருக்கிறது. 2. கொஞ்ச நேரத்திற்கு முன்பு, நான் தங்கியிருக்கும் இடத்திற்கு பக்கத்தில் ஒரு ஊழியக்காரர் வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்தார், அவர் கூறினார்... அவர் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டார், அவரும் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கிறார். ஒரு - ஒரு ஒரு வியாதிப்பட்ட நோயாளியான சிறுமி அவரிடம் இருக்கிறாள். அவள் மிகமிக மோசமான நிலையிலிருக்கிறாள். நான், "சகோதரனே, கூட்டத்திற்கு வந்துப்பாருங்கள்” என்றேன். “அநேகமாக இன்று அவர்கள் ஜெப அட்டைகளை கொடுப்பார்கள்” என்று நான் கூறினேன். ஆனால் இந்த மதிய வேளையிலோ நாங்கள் அவைகளை கொடுக்க வில்லை. நான் கூறினேன்... அவர், “சகோதரன் பிரன்ஹாமே, எங்களுக்கு ஜெப அட்டை வேண்டாம். நாங்கள் கவனிக்கவே விரும்புகிறோம்: கர்த்தருடைய ஆவியின் ஏவுதல்தான் (inspiration) எங்களை சுகமடைந்த நிலைக்கு உயர்த்துகிறது” என்று கூறினார். அந்த மனிதன் சொன்னது சரியே. அஹ்-அஹ். அவருக்கு அந்த உண்மையான அர்த்தம் புரிந்திருக்கிறது. அதற்கு தேவைப்படுவது அதுதான். உங்களுக்கு புரிகிறதா? அதினுடைய ஆவியின் ஏவுதல் தான் உங்களை அந்த இடம்வரைக்கும் உயர்த்திக்கொண்டுவருகிறது, அங்கே தேவன் என்ன செய்கிறார் என்று... அவருடைய பிரசன்னம் அங்கேயிருக்கிறது என்பதை காண்கிறீர்கள். இப்போது, தேவன் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்கி றார் என்றும், அதன்பின் அவர் இன்னொரு இடத்திலும், மறுபடியும் வேறொரு இடத்திலும் இருப்பார் என்பதை நீங்கள் அறிவீர்களா. நீங்கள் அதை அறிவீர்களா? மிக அதிகமான "ஆமென்களை” கேட்கவில்லை, ஆனால் அதுதான் உண்மை. பாருங்கள்? பாருங்கள்? “அப்பொழுது அந்த ஜனங்களை சுகமாக்கும்படிக்கு கர்த்தருடைய பிரசன்னம் அங்கே விளங்கிற்று.” அது சரியல் லவா? “அந்த வழியிலே கர்த்தர் மோசேயை சந்தித்தார்,” உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவன் சென்றபோது, அந்த வழியிலே அவனை சந்தித்தார். 3. என்னுடைய சபையில் ஒரு சீமாட்டி... சகோதரன் பீலர், திருமதி. வெபர். அவள் காசநோயினால் மரித்துக்கொண்டு இருந்தாள். கடைசி கட்டத்தில் அவள் சுகாதார நிலையத்தில் (sanatorium) இருந்தாள். வீட்டிற்கு சென்று மரிக்கும்படியாக அவளை அனுப்பிவிட்டார்கள்: அவளுக்கென்று ஒன்றுமே செய்யமுடியாது என்று கூறிவிட்டார்கள். ஜெபர்சன்வில்லில் இருக்கும் திருமதி. கிரேஸ் வெபர். அவள் கூடாரத் திலிருந்து கொஞ்ச தூரத்தில் வசித்து வந்தாள், அவளுக்கு ஐந்து அல்லது ஆறு குழந்தைகள். அந்த இரவு கர்த்தருடைய தூதனானவர் என்னிடம் வந்து, “சென்று, காரியங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும்படி திருமதி. வெபரிடம் இல்லை திரு. வெபரிடம் கூறு என்றார்; ஏனெனில் அந்த குழந்தைகள் அவரின் கையில் விடப் படும்; ஏனெனில் அவரின் மனைவி மரிக்கப்போகிறாள்” என்று கூறினார். சரி, நான் சென்று திரு. வெபரிடம் கூறினேன். அவருடைய சிறு பெண்பிள்ளையிடம், சிறு ஜீன் ரோஸிடம் கூறினேன், அவள் இப்போது நர்ஸாக (nurse) இருக்கிறாள். அவள் அப்போது ஒரு சிறு பிள்ளையாக இருந்தாள். இப்போது அவள் ஒரு இளம் சீமாட்டியாக இருக்கிறாள். அது நடந்து ஏழு அல்லது அதிகமான ஆண்டுகள் ஆகிவிட்டது. நான், "இப்போது, ஜீனி, உன் அம்மா மரிக்கப் போகிறாள். கொஞ்ச காலம் மட்டுமே அவளால் ஜீவிக்க முடியும்” என்று கூறினேன். 4. அதிலிருந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பிறகு, அவள் வேலை செய்துகொண்டிருந்த அரசாங்க நிலையத்திலிருந்து சில சீமாட்டிகள் வந்திருந்தார்கள். அவள்- கிரேஸ், திருமதி.வெபர், “இன்னும் ஒருவிசை எனக்காக ஜெபிக்கும் படி சகோதரன் பில் இருந்தால்” என்று கூறினாள், “என் உறவுபெண் ஒபோல் (Opal) காலை வரைதான் உயிரோடு இருப்பாள் என்று மருத்துவர்கள் கூறினார்கள், ஆனால் அந்த புற்றுநோயுடன் இருந்த அவள் சுகமானதை நான் கண்டிருக்கிறேன்” என்று அவள் கூறினாள். அவளுடைய மகளும் கூட நர்ஸ்தான். கூறினார்கள், அந்த - அவளுடன் வேலை செய்த அந்த அரசாங் கத்திலிருந்து வந்த அந்தப் பெண்கள் கூறினார்கள், “அந்த மனிதனை பற்றி பேச ஒன்றுமே இல்லை,” என்றார் கள். “அவன் ஒரு மாய்மாலக்காரனே (hypocrite) அன்றி வேறொன்றுமில்லை.” என்றார்கள். “அந்த மார்க்கமானது அவ்வளவுதான், வெறும் ஒரு கூட்ட போலியான மூடபக்தி வைராக்கியம் கொண்டவர்கள்” என்று கூறினார்கள். எனவே திருமதி.வெபர் கூறினாள், "பாருங்கள், நான் மரித்துக்கொண்டிருப்பது எனக்கு அது தெரியும், ஆனால் நீங்கள் பேசுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது" "அதைக் காட்டிலும் மேலானதை நான் அறிந்திருக்கிறேன்” என்று அவள் கூறினாள். “நான்- இந்த நகரத்திற்கு பக்கத்தில்தான், எல்லா நேரங்களிலும் அந்த மனிதனை சுற்றிதான் வசித்து வருகிறேன். அவர் சிறு பிள்ளையாயிருந்து, வளர்ந்தது வரை நான் பார்த்திருக்கிறேன்” என்று அவள் கூறினாள். “நான் அறிந்திருக் கிறேன்” என்று அவள் கூறினாள். “நீங்கள் வேண்டுமானால் அதை போலியானது என்று சொல்லிக்கொள்ளுங்கள்” என்றாள், “ஆனால் நான் அதை மிக அதிகமாக கண்டிருக் கிறேன், மேலும் தேவன் ஜனங்களை சுகமாக்குவதை கண்டிருக்கிறேன்” என்று கூறினாள். “அந்த மனிதனின் ஜீவியத்தை நான் அறிந்திருக்கிறேன் மேலும் அது உண்மை என்பதை நான் அறிந்திருக்கிறேன்” என்று அவள் கூறினாள். 5. எதிர்பாராதவிதத்தில் கர்த்தருடைய தூதனானவர் அதைக்கேட்டு விட்டார். சரியாக அந்த இரவே, அறையில், என்னுடைய நாற்காலிக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தேன், நான் எழுந்து சென்று கொஞ்சம் தண்ணீரை குடித்த பிறகு, சரியாக காலை மூன்று மணிக்கு, நாற்காலியில் உட்கார்ந் திருந்தபோது, அவர் வாசலின் வழியாக நடந்து வருவதை நான் கண்டேன். அவர், “நாளை (ஞாயிற்றுக்கிழமை), அவர்கள் திருமதி.வெபரை அழைத்து, அவளை ங்கே கொண்டு வரப்போகிறார்கள். அவள் வலதுகை பக்கமாக, கூடாரத்தில் மிகவும் பின் பக்கத்தில் உட்கார்ந்திருப்பாள். "அவள் பேசியதை நான் கேட்டேன், அவள் என்ன கூறினாளோ அதை நான் கேட்டேன் என்று அவளிடம் கூறு. கர்த்தர் உரைக்கிறதாவது, அவள் மரிக்கப் போவதில்லை ஆனால் ஜீவிக்கப்போகிறாள் என்று அவளிடம் கூறு' என்றார். அவள்...?... அதுவே அதை நிரூபிக்கிறது. நீங்கள் விரும்பினால் நீங்கள் சென்று அவளை சந்திக்கலாம்: அது நடந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. எல்லாம் சரி. பாருங்கள்? எது சரியானதோ அதற்காக அவள் நின்றபோது அவருடைய பிரசன்னம் அங்கே இருந்தது. பாருங்கள்? அவருடைய பிரசன்னம் அங்கே இருந்தது, அவர் - அவர் அவளை கண்டுபிடித்தார். எனவே அவர் வந்து அவள் என்ன கூறினாளோ அதை என்னிடம் கூறினார் - இந்த பெண்களிடம் அவள் கூறியதை, கூறினார்... எது தேவனை பிரதிநிதித்துவப்படுத்துகிறதோ (representing) அதற்கு அவள் மரியாதை கொடுத்தால், அவர் அவளுக்கு மரியாதை கொடுத்தார். எனவே தேவன் அதே காரியத்தைதான் உங்க ளுக்கும் செய்வார். எனக்கு மரியாதை கொடுப்பதினால் அல்ல ஆனால் அவருக்கு, கிறிஸ்துவுக்கு, உங்களுடைய சுகமளித்தலுக்காக மரித்த அந்த ஒருவருக்கு மரியாதை கொடுப்பதினால் நீங்கள் அவருக்கும் அவருடைய வார்த்தைக்கும் மாத்திரம் மரியாதை கொடுத்தால், தேவன் உங்களுக்காக காரியத்தை செய்வார். ஆமென். அது சரியே. 6. இப்போது, இன்றிரவு நாம் வார்த்தையிலிருந்து சில வற்றை பேச விரும்புகிறோம். இந்த மதிய வேளையில், நான் மென்மையாக பிரசங்கித்தது போன்றுதான் இருக்கிறது [ஒலிநாடாவில் காலியிடம்) …..ஏனெனில் அவன் மாரடைப்பால் மரிக்கப்போகிறான். என்னுடைய அப்பா வந்து அவனுடைய இடத்தை குறித்து விட்டு, அது யார் என்று - அது எங்கே இருந்தது என்றும் அவர் எங்கே செல்கிறார் என்றும் சொன்னார். “நான் சொப்பனம் கண்டேன்.” இல்லை, நின்று இந்த காரியங்களை பார்த்துக்கொண்டிருக்கிற வேளையில், நான் இங்கே நடந்து முடிந்த மற்ற காரியங்களையும் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அந்த மனிதன் முழு பலத்தோடும், ஆரோக்கியத்தோடும் எல்லாவற்றோடும் இருந்தான். சில இரவுகளுக்கு முன்பு, மாரடைப்பால் மேஜைக்கு குறுக்கே விழுந்து, அங்கே... கிடக்கிறான், நல்லது, இப்போது அவன் உயிர் வாழ்வதே மிக கடினமாயுள்ளது. பாருங்கள்? எனவே ஜெபிப்பதினால் எந்த பயனுமில்லை. அவனுக்கான நேரம் வந்துவிட்டது, அவனுக்கும் அது தெரியும், அவன் மரிக்கப்போகிறான். பாருங்கள்? அவன் என் சகோதரன். இப்போது, நான் ஒரு சுகமளிப்பவனாக இருந்தால், நான் சென்று அவனை சுகப்படுத்துவேன், நான் செய்வேன் தானே? அவன் என் சகோதரன். ஆனால் நான் சுகமளிப்பவன் அல்ல, தைரியத்தை கொடுக்கும் எந்த தகவலையாவது என்னால் அவனிடம் சொல்ல முடிந்தால், நான் சென்று அவனிடம் சொல்ல விரும்புவேன். ஆனால் என்னால் சொல்லமுடிந்த ஒரே ஒரு காரியம் என்ன வென்றால், “அவன் மரிக்கப்போகிறான்,” ஏனெனில் அதைதான் தேவன் என்னிடம் கூறினார். பாருங்கள்? அவன் மரித்துவிடுவான் அது சரி. எனவே இப்போது (பாருங்கள்?), எனக்கு, அது... நான் ஒரு சுகமளிப்பவனாக இருந்தால், நான் நிச்சயமாக சென்று என் சொந்த சகோதரனை சுகப்படுத்தி விடுவேன் என்பதை தேவன் அறிவார். ஆம், ஐயா, ஆனால் என்னால் அதை செய்ய முடியாது. அவ்வளவுதான். தேவனும்... எனக்கு தெரிந்த ஒரே ஒரு காரியம் என்னவென்றால், அவன் வேண்டுமானால், பழைய ஏற்பாட்டில் இருந்த எசேக்கியாவை போன்று, தன்னுடைய முகத்தை சுவர் பக்கமாக திருப்பி, அழுது, தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை தேவனிடமாக கூறலாம். ஒருவேளை தேவன் அவனை அந்த வழியில் தப்புவிக்கலாம், ஆனால் அந்த... நான் அதை அறியேன். அது அவனுக்கும் தேவனுக்கும் இடைப்பட்டது. என்னால் முடிந்த ஒரே ஒரு காரியம் என்னவென்றால், அவர் என்னிடம் சொன்னது போலவே அந்த தகவலை அப்படியே சொல்வது மட்டுமே. 7. இப்போது, நான் சிலவற்றை இரண்டு இராஜாக்களில் இருந்து வாசிக்க விரும்புகிறேன். யார் அந்த பழைய பாணியிலான சசாப்பிராஸ் (Sassafras), சோள ரொட்டி மற்றும் பீன்ஸ் போன்ற பிரசங்கத்தை கேட்க விரும்புகிறீர்கள்? நீங்கள் அதை விரும்பு கிறீர்களா? அந்த பழைய பாணியிலான விதத்தை? சரி இப்போது, நான் ஒரு நல்ல பிரசங்கி கிடையாது, ஆனால் நான்... அந்த பழைய பாணியிலான விதம் எனக்கு பிடிக்கும். எனக்கு அந்த ஒரே ஒரு விதத்தில் மட்டும்தான் பிரசங்கிக்க தெரியும். அது என்னை இரட்சித்தது, நான் உங்களிடம் கூறுகிறேன், அது உங்களுக்கும் நன்மையானதாக இருக்கும். அது உங்களை இரட்சிக்கும். அது உங்கள் மீது மிக அதிகமான பாலிஷ் பூசாது, ஆனால்... அது உங்களுக்கு வெள்ளை அடிக்காது, அது உங்களை கழுவி வெள்ளையாக்கும் நீங்கள்- நீங்கள்... ஆம், ஐயா. நான் அந்த பழைய பாணியிலான கரடு முரடான, ஆகாய நீலம்கொண்ட, பாவத்தைக் கொல்லும் மார்க்கத்தில் விசுவாசம் கொண்டிருக்கிறேன். அது சரி. அது நம் எல்லோரையும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாக்குகிறது. அது பட்டுத்துணி அணிந்திருப்பவர்களையும் எளிமையான பருத்தித்துணி அணிந்தி ருப்பவர்களையும் ஒருவர் மீது ஒருவர் கைகளை போட்டு, ஒருவரை ஒருவர் “சகோதரியே” என்று அழைக்கவைக்கும். அது டக்ஸீடோ (tuxedo) அணிந்திருப்பவரையும் ஓவரால்ஸ் அணிந்திருப்பவரையும் [எளிமை யான தொழிலாளியின் உடை] கட்டியணைத்து “சகோதரனே” என்று அழைக்க வைக்கும். அது சரி. நம் அனைவரையும் அது ஒரே மாதிரியாக்கும். எனவே அது ஜான் வெஸ்லியையும், டுவைட் மூடியையும், சான்கியையும் (Sankey), ஃபின்னியையும் (Finny), நாக்சை யும் (Knox), பவுலையும், பேதுருவையும், யாக்கோபையும், யோவா னையும் மற்ற எல்லாரையும் இரட்சித்தது... நல்லது-அது இருக்கும் - அது எனக்கு போதுமானதாக இருக்கிறது. அது – அதுவே நிறைவாயிருக்கிறது. 8. இப்போது, இரண்டு இராஜாக்கள் 3-ம் அதிகாரத்தில், வேதாகமத்திலிருந்து சில பகுதிகளை அல்லது மாறாக சில வசனங்களை வாசிக்கும்படி, 10-ம் வசனத்திலிருந்து ஆரம்பிக்கலாம். நம்மால் முடிந்த அளவுக்கு நாம் துரிதமாக சுகமளித்தலின் வரிசைக்கு சென்றுவிடலாம். அல்லது, சுகமளித்தலின் வரிசைக்கு அல்ல; சுகமளித்தலின் வரிசை கல்வாரியில் இருக்கிறது. வியாதியஸ் தர்களுக்காக நாம் ஜெபிக்கப்போகிறோம். இஸ்ரவேலின் நாட்களில் இது ஒரு மகத்தான நாளாய் இருந்தது, சிதறியிருக்கும், அதிருப்திமிக்க, ஒரு கூட்ட ஜனங்களாக; இன்று நாம் நிற்பது போல ஒரு தீர்மானத்தின் நேரத்தில் இருந்தார்கள். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ,... இந்த மூன்று ராஜாக் களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே... என்றான். அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான். அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்தில் போனார்கள். எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பனின் தீர்க்கதரிசிகளிடத்திலும், உம்முடைய தாயாரின் தீர்க்கதரிசிகளிடத்திலும் போம் என்றான். அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியரின் கையில் ஒப்புக் கொடுக்கி றதற்கு வரவழைத்தார் என்றான். அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால் நான் உம்மை நோக்கவுமாட்டேன், உம்மைப் பார்க்கவு மாட்டேன் என்று சேனைகளுடைய கர்த்தருக்கு முன்நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி, அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத் தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள். நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காண மாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்; மோவாபியரையும் உங்கள் கையிலே அழிப்பார் ஒப்புக்கொடுப்பார். (ஆங்கிலத்தில் உள்ளபடி மொழி பெயர்ப்பு] நீங்கள் சகல கோட்டைகளையும் சகல சிறந்த பட்டணங்களையும் தகர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளை யெல்லாம் தூர்த்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான். மறுநாள் காலமே பலிசெலுத்தப்படும் நேரத்தில்,... இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாய் வந்ததினால் தேசம் தண்ணீரால் நிரம்பிற்று. (2 இராஜாக்கள் - 3:10-20) 9. நம்முடைய தலைகளை ஒரு நிமிடம் தாழ்த்தலாம். இப்போது, பரலோக பிதாவே, விசுவாசம் கேள்வியினாலே வரும், உம்முடைய வார்த்தையை கேட்பதினாலே வரும். இப்போது, உம்முடைய வார்த்தையில் நாங்கள் இந்த மகத்தான நிகழ்ச்சியை வாசிக்கையில், கர்த்தாவே, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளோடு இருந்த அந்த அதே தேவனாய், வனாந்திரத்தில், யாத்திரையில் இஸ்ரவேலுடன் இருந்தது போல, சிங்க கெபியில் தானியேலோடும்; அக்கினி சூளையில் பிள்ளைகளோடும்; அப்போஸ்தலர்களோடும் இருந்த அந்த தேவ குமாரன்; காலத்தினூடாக இன்றிரவும் அதே மாறாத தேவனாக இருக்கிறீர் என்பதை விசுவாசித்து, ஜனங்கள் இன்றிரவு இங்கே கூடியிருக்கிறார்கள். இப்போது, அவரிடமிருந்து ஆசீர்வாதம் வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், நாங்கள் பரிதாபமாக தகுதியே இல்லாதவர்களாய் இருக்கிறோம், ஆனால் தேவையுள்ள பிள்ளைகளாய், அவருடைய பிரசன்னத்தில் நின்று, நாங்கள் தவறு செய்துவிட்டோம் என்று எங்களுடைய பாவங்களை தாழ்மையோடு அறிக்கை செய்து, மன்னிப்பு கேட்டு, ஜெபிக்கிறோம், தேவனே எங்களுடைய ஜீவியத்திலோ அல்லது எங்களுடைய வழியிலோ ஏதேனும் இருக்குமானால், இன்றிரவு நடக்கும் இந்தக் கூட்டத்தை வெற்றி பெறாமல் போகவைக்கும் ஏதேனும் அவிசுவாசம் இருக்குமானால், தேவனே இப்போதே எங்களை மன்னிக்குமாறு, நாங்கள் ஜெபிக்கி றோம். இன்றிரவு இந்தக் கூட்டத்தில், தேவனுடைய ஆவியானவர் எந்த தடையுமின்றி பாதையில் செல்வாராக; ஜனங்களை ஆசீர்வதித்து, அவர்களை சுகமாக்குவாராக; பாவிகளை இரட்சிப்பாராக; இந்த ஆராதனையிலிருந்தும், எங்களுடைய பிரயாசங்களில் இருந்தும் மகிமையை எடுத்துக்கொள்வாராக. உம்முடைய நேசகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நாங்கள் இதை கேட்கிறோம். ஆமென். 10. இராஜா [ஒலிநாடாவில் காலியிடம்] யூதர்களுடைய காலத்தில் எருசலேமில், இராஜாவாகிய யோசபாத் யூதர்களுடைய இராஜாவாக இருந்தான், அவர்கள் வெவ்வேறாக பிரிந்திருந்தார்கள். ஏதேனும் – சபைகளை போன்று, இவ்வாறான பிரிவினைகள் நம் சபையில் இருக்கும்வரை, நாம் ஒருபோதும் ஒன்றாகவே இல்லை. இந்தியர்கள் இந்த அமெரிக்காவை வெள்ளையர்களிடம் இழந்துவிட்டார்கள், ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளா கவே ஒற்றுமையான குழுவாக இல்லாமல், வெவ்வேறாக பிரிந்திருந்தார்கள். அவர்கள் பழங்குடிக ளுக்குள்ளாகவே சண்டைப்போட்டு கொண்டிருந்தார்கள் (Tribal Fights - செவ்விந்தியர்கள் என்று ஒட்டுமொத்தமாக அழைக்கப் பட்டாலும், அவர்களுக்குள் வெவ்வேறு பழங்குடி இனப் பிரிவுகள் இருந்தன, இப்பொழுதும் இருக்கின்றன]. அவர்கள் மாத்திரம் தங்களை ஒன்றிணைத்திருந்தால், தங்கள் நிலத்தை அவர்கள் தக்கவைத்துக் கொண்டிருந்திருப்பார்கள். ஏதேனும் ஜனங்களுக்காக நான் மிகவும் வருந்துவேனென்றால் அவர்கள் இந்தியர்களே. அவன் தான் உண்மையான அமெரிக்கன்; நாம் அல்ல. நாம் இடம் பெயர்ந்து வந்தவர்கள் (immigrants). தேவன் அமெரிக்காவை உண்டாக்கியபோது அவன்தான் அமெரிக்கனாயிருந்தான். சமீபத்தில், அவர்களுக்காக நான் ஒரு கூட்டத்தை கார்லஸ்பாடில் (Carlsbad) நடத்தினேன்- என்னை மன்னித்து விடுங்கள். அந்த பழங் - பெயரை நான் மறந்துவிட்டேன், அவர்கள் அப்பாச்சிக்கள் (Apaches - செவ்விந்தியர்களில் இருக்கும் ஒரு பழங்குடியின் பெயர்], சான் கார்லோஸில், அரிசோனாவில் நடந்தது. அந்த இரவை என்னால் எப்போதுமே மறக்க முடியாது. இந்தியர்களில் யாருக்காவது நான் ஜெபித்தேன் என்றால் அதுதான் முதல் முறை. அவர்களில் இருவர் அங்கே வந்திருந்தார்கள், அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதை கர்த்தர் வெளிப் படுத்தினார், மேலும் நான், “கர்த்தாவே, நீர் இவர்களை சுகப்படுத்தினால், நான் தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளுக்குள் (Reservation) செல்கிறேன்" என்றேன் (Reservation - அமெரிக்காவில் செவ் விந்தியர்களுகென்று ஒதுக்கப்பட்ட பகுதிகள்]. அவர் சுகப்படுத்தினார். அதை செய்யும்படி அந்த மிஷனெரி எனக்கு நன்றாக உதவினார். எனவே நான் அந்த தனி ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்றேன். அது சுமார், அநேகமாக இருபதாயிரம் அல்லது அதற்கும் அதிகமானவர்கள் அந்த சாயங்கால நேரத்தில் அங்கே கூடியிருந்தார்கள். சரியாக ஒரு சிறு சபைக்கு முன்பாக, இதுபோன்ற ஒரு சிறு மேடையை அவர்கள் கட்டியிருந்தார்கள். பெரிய மின் விளக்குகள் (floodlights) இருந்தன. சுற்றிலும் அந்த சிறு கட்டைகளை போட்டு தீ மூட்டி (little fires,) இருப்பதையும், அந்த இந்தியர்கள் அவர்களுடைய சிறு கம்பளிகளில் அமர்ந்திருப்பதையும், சுற்றிலும் அந்த குட்டி பப்பூஸ்கள் இருப்பதையும் (அது அப்படியென்றால் குட்டி குழந்தைகள்), அவர்கள் அனைவரையும், வயதானவர்கள் மிக நீண்ட குழாயில் புகைப்பிடித்துகொண்டும் பேசிக் கொண்டும் அங்கே இருப்பதையும் பார்ப்பது இதுவரையில் நீங்கள் பார்த்திராத அழகான காட்சியாய் இருந்தது. 11. மேலும் நான் பேச ஆரம்பித்தபோது... இப்போது, இந்தியன் மிகவும் விசித்திரமான மனிதன். இப்போது, அவன் - அவன் நின்று நீங்கள் பேசுவதை கவனிப்பான், ஆனால் அவன் செய்யமாட்டான் - அவன் அதைப்பற்றி நிச்சயமுடையவனாகும்வரை தன்னுடைய தீர்மானத்தை செய்யவே மாட்டான். கொஞ்ச காலத்துக்கு முன்பு ஒருவருடன் பில்லி பாலுக்கு கொஞ்சம் அனுபவம் கிடைத்தது. நான், “பில்லி, அந்த ஜெப அட்டைகளை வழங்கும்போது, உண்மையாகவே-வியாதியாயிருக்கும் ஜனங்களுக்கு அதைக்கொடு. தலைவலியோடோ அல்லது பல்வலியோடு யாராவது இருப்பார்கள், ஆனால் அங்கேயிருக்கும் ஜனங்களோ புற்று நோயால் மரித்துக்கொண்டிருப்பார்கள், யார் உண்மையாகவே வியாதியாயி ருக்கிறார்களோ அவர்களுக்கு கொடு” என்று கூறியிருந்தேன். “எல்லாம் சரி” என்றான். அவன் சென்றான், இது பீனிக்ஸில் நடந்தது. எனவே அவன் ஜெப அட்டைகளை கொடுத்துக்கொண்டிருந்தான், ஒரு இந்தியர் நடந்து வந்து, அவர்... [சகோதரன் பிரன்ஹாம் மெதுவாக தட்டுகிறார்]. அவன் முதுகில் மெதுவாக தட்டி, “நான் வியாதியாயிருக்கிறேன்” என்றார். அவன், “நல்லது, தலைவரே, உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்டான். அவர், “நான் வியாதியாயிருக்கிறேன்” என்றார். நல்லது, அவன் அப்படியே திரும்பி அவரை விட்டு விலகி நடந்து சென்றுவிட்டான். கைகளை பின்பாக வைத்தவாறு தலைவர் அவனை தொடர்ந்து பின்சென்றார். நேரடியாக, அவன் ஏறக்குறைய - அந்த ஜெப அட்டைகள் ஒன்றின் பின் ஒன்றாக குறைந்துகொண்டே சென்றதை தலைவர் கவனித்துகொண்டிருந்தார், எனவே அவர் [சகோ தரன் பிரன்ஹாம் செய்து காட்டுகிறார்], அவனை மீண்டுமாக முதுகில் தட்டினார். அவன் அவர் பக்கமாக திரும்பி, “தலைவரே, என்ன பிரச்சனை?” என்று கேட்டான். அவர், “நான் வியாதியாயிருக்கிறேன்” என்றார். அவன் கூறினான், “தலைவரே, உண்மையாகவே மிகவும் வியாதிப்பட்ட ஜனங்களுக்குதான் நான் இவை களை கொடுக்க வேண்டும்.” “உங்களுடைய பிரச்சனை என்ன?” என்று கேட்டான். அவர், “நான் வியாதியாயிருக்கிறேன்” என்றார். எனவே அவன் இன்னும் கொஞ்சம் தூரம் சென்றான், ஆனால் அவரோ அவனை மீண்டும் பிடித்துவிட்டார். அவனிடம் இரண்டு அல்லது மூன்று ஜெப அட்டைகள் இருந்தன. அவன், “தலைவரே, உங்களுக்கு என்னதான் பிரச்சனை?” என்று கேட்டான். அவர், “நான் வியாதியாயிருக்கிறேன்” என்றார். அப்படியானால் ஜெப அட்டையில் “நான் வியாதியாயிருக்கிறேன்” என்று எழுதுங்கள், என்று பில்லி கூறினான். அது போன்றதை நீங்கள் அறிவீர்கள். “நான் வியாதியாயிருக்கிறேன்”. அவர் - அவர் வியாதி யோடு தான் இருந்தார். அவருக்கு என்ன பிரச்சனை என்பதை அவர் கூற விரும்பவில்லை, ஆனால் அவருக்கு தெரிந்த ஒரே காரியம்... ஒருவேளை அவரால் சொல்ல முடிந்தது அவ்வளவுதான். அப்படி சொல்லும்படி யாரோ ஒருவர் அவரிடம் கூறியிருந்தார்கள், உங்களுக்கு தெரியும், “நான் வியாதியாயிருக்கிறேன்.” அவருக்கு தெரிந்த தெல்லாம் அவ்வளவுதான். ஒருமுறை ஒருவனை மனந்திருந்தும்படி (converted) நான் செய்திருந்தேன், அவனுக்கு எப்படி கத்தி ஆர்ப்பரிப்பதென்று தெரியவில்லை; எனவே அவனுக்கு இரண்டே வார்த்தைகள் மட்டுமே தெரிந்திருந்தது, அது ஜூலை மற்றும் ஆகஸ்ட் என்பவைகளே, அவன் “ஜூலை, ஆகஸ்ட், ஜூலை, ஆகஸ்ட், ஜூலை, ஆகஸ்ட்” என்று கத்தி ஆர்ப்பரித்துகொண்டே தன்னால் முடிந்த அளவுக்கு வேகமாக ஓடினான். சற்றே... அவனுக்கு செய்ய தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான்; அந்த வார்த்தைகளை மட்டும் தான் அவனுக்கு சொல்ல தெரியும். ஆனால் நாம்... நாம் எந்த அளவுக்கு செய்தோமோ அந்த அளவுக்கு அவனும் கத்தி ஆர்ப்பரித்தான். ஆம், அது சரி. அது தேவனை மகிமை படுத்தும்படியாக, அவனுக்கு சொல்ல தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான். 12. எனவே சான் கார்லோஸ் கூட்டத்தில் அந்த இரவு, நான் பேசிக்கொண்டிருந்தேன். நான் கூறினேன், “ஜனங்களே, என்னை மன்னித்துவிடுங்கள். பிரிட்டனுக்கும் அது போன்ற நாடுகளுக்கும் பணம் அனுப்புவது என்பது எங்கள் கொடியில் படிந்திருக்கும் கறை என்று நான் நினைக்கிறேன். அந்த ஏழை ஜனங்களோ அதை பெறுவ தில்லை. நான் டெமோக்கிரடிக்கனோ (Democrat) அல்லது ரிபப்ளிக் கனோ (Republican) அல்ல [அமெரிக்காவில் உள்ள அரசியல் கட்சிகளின் பெயர்]; நான் ஒரு கிறிஸ்தவன். பாருங்கள்? எனவே இப்போது... ஆனால் நான் உங்களிடம் கூறுகிறேன்; அது ஒரு கூட்ட முட்டாள்தனங்களே. நான் சரியாக அங்கே இருந்து அதை பார்த்தேன். நான் சரியாக அங்கே இருந்தேன் யாருடனென்றால்... அந்த அரசர் என்னை அழைத்திருந்தார் எனவே நான் சென்று அவருடைய அரண்மனையிலும் மற்றவை களிலும் இருந்தேன் மேலும் அங்கே சென்றிருந்தேன். அந்த ஜனங்கள் அரை பட்டினியால் மரிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்; அந்த பணம் அவர்களிடம் சேருவதில்லை. அதி சீக்கிரத்தில் ரஷ்யா அதை திருப்பி உங்கள் மீது வெடிக்க வைக்கும், எனவே -ஜப்பான் செய்தது போல, எனவே... சகோதரனே, அமெரிக்கா வினுடையது அமெரிக்காவிலே இருக்கட்டும் என்பதே என் கருத்து; அது இருக்கவேண்டிய இடம் அதுதான். நான் உன்னிடம் கூறுகிறேன்... நண்பனே, நான் அங்கே சென்று அந்த பரிதாபமான இந்தியர்கள் அங்கே படுத்து கிடந்ததை பார்த்தபோது, அவர்களில் சிலர்... ஒவ்வொரு ஆண்டும் அவர்களில் நூற்றுக்கணக்கானோர் மரிக்கிறார்கள் ஏனெனில் ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு ஒரு சில நிக்கல்கள்(nickels) மட்டுமே கிடைக்கின்றன, அல்லது ஒரு சில டாலர்கள் மட்டுமே ஓய்வூதியமாக கிடைக்கின்றன, அதைக் கொண்டு அவர்களால் வாழ முடியவில்லை. அவர்கள்... பின்பு அவர்கள் அப்படியே வந்து... அவர்கள் கொஞ்சம் செம்மறி ஆடுகளை வளர்த்துக்கொண்டிருந்தார்கள், அவர்களிடமிருந்த அதை எல்லாம் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள், அவர்கள் என்ன செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அப்படியே... அந்த ஜனங்கள் பனியால் உறைகிறார்கள், பட்டினியால் மரிக்கிறார்கள், எல்லாவற்றிற்குமே ஆளாகிறார்கள், அது அவமானம் என்று நான் நினைக்கிறேன். நான் அப்படிதான் நினைக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியர்களுக்கே. 13. எனவே நான், “இப்போது, என்னால் அதில் உதவ முடியாது, நானும் ஜனங்களில் ஒருவன்தான்” என்றேன், நான், “எங்களுடைய பிதாக்கள் உங்களை பின்னாக தள்ளி, அதுபோன்றவைகளை செய்து, உங்களிடமிருந்ததை உங்களை விட்டு எடுத்துக்கொண்டார்கள், உங்களுடைய வேட்டையாடும் நிலங்களை எடுத்துக்கொண்டார்கள். வெள்ளையன் தொடக்கத்திலிருந்தே ஒரு கொலைகாரனா யிருக்கிறான்: இறைச்சிக்காக மட்டும் அல்ல, ஆனால் அவனால் எவ்வளவு கொல்ல முடியும் என்பதை பார்ப்பதற்காகவே, அவன் ஓடிச்சென்று எருமைகளை சுடுகிறான்” என்றேன். அப்படிதான் நடக்கிறது. நான் இங்கே இந்தியானாவில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரியாக (game warden) சுமார் ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் இருந்தேன். அது உண்மை என்பதை நான் அறிவேன். வெள்ளையன் ஒரு - அவன் - குணபடாதவனாகும் போது (unconverted), அவன் வெறும் ஒரு கொலைகாரனே அல்லாமல் வேறல்ல. அவன் அப் படியே எடுத்துக்கொள்கிறான், அவன் கையில் மாட்டும் எல்லாவற் றையும் கொன்றுவிடுகிறான், அவனால் சுட முடிகிறதா என்பதை பார்ப்பதற்காகவே சுடுகிறான். அது மிகவும் ஆழமாக சென்றது, ஆனால், சகோதரனே, இதுதான் நான் இங்கே மேலேயிருந்து உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கும் சுவிசேஷம். அதுதான் உண்மை; அது சரி. சட்டம் ஐந்து அணில்களை அனுமதிக்கும்போது, அவனிடம் மாட்டினால், அவன் ஆறு அல்லது ஏழு, எட்டு அல்லது பத்தை சுடுகிறான். ஆம். இப்போது அதுதான் அவனுடைய சுபாவம் என்பதை நான் அறிவேன். இந்தியனோ அப்படி கிடையாது. அவன் ஒன்றை பிடிக்கும் போது, இன்னொன்று பெரிதாக அங்கே இருந்தால், அவனிடம் இரண்டு மாட்டிக்கொண்டது, அவன் அதில் ஒன்றை போகவிட்டுவிட்டு மற்றொன்றை வைத்துக் கொள்கிறான். அவன்தான் உண்மையான வனவிலங்கு பாதுகாவலனாயிருக்கிறான் (conservationist). 14. இப்போது. ஆனால் என்னவாயினும், "அவர்கள் உங்களை பின்னாக தள்ளினார்கள், அதைதான் அவர்கள் உங்களுக்கு செய்தார்கள், உங்களை பின்னாக தள்ளி, உங்களை பின்னாக தள்ளி விட்டுவிட்டார்கள். நியாயமற்ற விதத்தில் மோசமான ஒப்பந்தமே உங்களுக்கு கிடைத்தது” என்று நான் கூறினேன். ஆனால், “என்னால் அதில் உதவ முடியாது; நான் அல்ல - நான் அமைப்பதில்லை இல்லை- அ-- இந்த தேசத்தினுடைய சட்டங்களை” என்று கூறினேன். ஆனால் நான், “இன்றிரவு உங்களுக்கு நியாயமான விதத்தில் ஒரு ஒப்பந்தத்தை தரக்கூடிய யாரோ ஒருவரை பற்றி நான் உங்களிடம் கூற முயற்சிக்கிறேன், அவர் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே” என்றேன். “மற்றவர்களை இரட்சிக்கும்படியாக அவர் மரித்தது போலவே, உங்களையும் இரட்சிக்கும்படியாக அவர் மரித்தார்” என்று நான் கூறினேன். மேலும் நான், “சரியாக இப்போது, நிச்சயமாக, அதை குறித்து சந்தேகப்பட உங்களுக்கு உரிமை உண்டு என்று நான் நினைக்கிறேன்; ஆனால் நான் உங்களிடம் உண்மையைத் தான் கூறுகிறேன் என்பதை தேவன் நிரூபித்தாரென்றால், நல்லது பின்பு, அதை குறித்து சந்தேகப்பட இதற்கு மேல் உங்களுக்கு எந்த வழியுமே இல்லை” என்றேன். எனவே நான் ஜெப வரிசைக்கு அழைத்தேன், வழக்கமாக, ஜெப அட்டைகள் இல்லாமல் ஜெப வரிசைக்கு அழைத்தால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்: கூட்டநெரிசலாகிவிடும். எனவே அப்போது, என்னிடம் - என்னிடம் எந்த ஜெப அட்டையுமே இல்லை, ஆகவே நான் சில நிமிடங்களுக்கு முன்பாகவே அங்கு சென்று, “எங்களிடம் எந்த ஜெப அட்டைகளும் இல்லை, எனவே எத்தனை பேர் ஜெபித்துக்கொள்ளும்படி விரும்புகிறீர்கள், உங்களுடைய கையை உயர்த்துவீர்களா?” என்று நான் கேட்டேன். அங்கே ஒரே ஒரு மொழி பெயர்ப்பாளர் தான் இருந்தார். ஒருவருமே தங்களுடைய கையை உயர்த்த வில்லை. நான், “யாரெல்லாம் ஜெபித்துக்கொள்ளும்படி விரும்புகிறீர்களோ, அவர்கள் எல்லாரும் இந்த பக்கமாக வரிசையில் நில்லுங்கள்” என்றேன். யாருமே வரிசையில் நிற்கவில்லை. நல்லது, அப்போது அந்த மிஷனரி அந்த சிறிய சபைக்குள் சென்று, அவள் தன்னிடமாக கொண்டிருந்த யாரோ ஒரு பெண்ணை அழைத்து வந்தாள். இதோ அவர்கள் எல்லாரும் வந்தார்கள். 15. பெண்களே, நீங்கள் அந்த சிறு இந்திய குழந்தைகளை பார்க்கவேண்டும்: மிகவும் அழகான சின்னஞ்சிறு குழந்தைகள், ஆனால் அவர்கள்... என்னால் புரிந்துக் கொள்ள முடியாதது என்னவென்றால், அந்த குழந்தைகள் எல்லாவற்றையும் அவர்கள் மரத்தொட்டில்களில் தொங்க விட்டிருந்தார்கள், அந்த குழந்தைகளில் ஒவ்வொன்றுமே பார்ப்பதற்கு அப்படியே ஒரே மாதிரியாக இருந்தன. எப்படி அவர்களால் அந்த குழந்தைகளுக்கு இடையே வித்தியாசத்தை சொல்ல முடியும், என்னால் முடியாது. நான்... ஒருவள் சென்று ஒரு குழந்தையை தூக்கி, அவளின் பின்னாக அசைவாட்டுவாள். சிறு மழலை அழவே இல்லை அல்லது ஒன்றுமே செய்யவில்லை, அவன் அப்படியே அங்கே அமைதியாக இருந்தான். அந்த குழந்தைகளில் ஒன்றுடன் நான் விளையாடிக் கொண்டிருந்தேன்; நான் பேசியவுடனே-அந்த சீமாட்டி கடந்து வந்தாள்-அவளுடன் சிறிது நிமிடங்கள் பேச முயற்சித்துக்கொண்டிருந்தேன், அவளுக்கு பால்வினை நோயிருந்ததை நான் கண்டேன்: அவள் ஒழுக்கக்கேடாக ஜீவித்ததால் அல்ல. அவள் ஜீவிக்கிற சூழ்நிலையால் வந்தது. எனவே நான், “அது ஒரு பால்வினை நோய்” என்று கூறினேன், மேலும் மொழி பெயர்ப்பாளரும் கூறினார்... அவள் என்னை திரும்பி பார்த்தாள், அந்த கருத்த கண்கள் ஆச்சரியத்தால் விரிவடைந்து கூர்ந்து கவனித்தது. பின்னாக இருந்த அந்த சீமாட்டியை அவள் பார்த்தாள், மொழி பெயர்ப்பாளர், “அது உண்மையா?” என்று கேட்டார். "ஆம், ஆனால் எனக்கு அது எப்படி தெரிந்தது?” பாருங்கள்? அதைதான் அவள் தெரிந்துக்கொள்ள விரும்பினாள். நான், “இப்போது, அவள் ஒழுக்கக்கேடானவள் அல்ல; அவள் ஒரு உண்மையான பெண்; ஆனால் அது என்ன வென்றால், அது அவள் ஜீவிக்க வேண்டிய சூழ்நிலை” என்றேன். ஆனால் அது பால்வினை யாயிருந்தது. அப்படியானால் தேவன் அவளை சுகப்படுத்துவாரா? என்று என்னிடம் கேட்கும்படியாக அவள் மொழிபெயர்ப்பாளரிடம் கேட்க விரும்பினாள். நான், “ஆம். நீ விசுவாசித்தால்” என்றேன். எனவே அவளுக்காக நான் ஜெபித்தேன். அடுத்ததாக வந்தது ஒரு - ஓ, கண் அழுத்த (glaucoma) நோயுள்ளவர், இந்தியர்களின் மத்தியில் அது மிகவும் பரீட்சியமான நோய். 16. அடுத்ததாக ஒரு சிறு பெண்பிள்ளை வந்தாள், அவளுக்கு காதும் கேட்காது வாயும் பேச முடியாது. நான், “இப்போது, இந்த சிறு பெண் பிள்ளைக்கு காதும் கேட்காது வாயும் பேச முடியாது. கொஞ்ச காலத்துக்கு முன்பு இவளுக்கு காய்ச்சல் இருந்தது, அது இவளை காது கேட்காதவாறும் வாய் பேசாதவாறும் செய்துவிட்டது” என்றேன். அந்த குழந்தையின் தாயார், “அது உண்மை. அது முற்றிலும் உண்மை” என்றாள். நான், “தேவன் இந்த குழந்தையை சுகப்படுத்துவார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?” என்று கேட்டேன். “ஆம்,” அவள் அதை விசுவாசித்தாள். எனவே நான் கர்த்தரிடம் அதை: அந்த குழந்தையை சுகப்படுத்துவீரா என்று கேட்டேன். நான் ஜெபித்தவுடன், நான் இப்படியாக [சகோதரன் பிரன்ஹாம் தன்னுடைய கைகளை தட்டிக்காண்பிக்கிறார்] செய்தேன். அவள், அந்த சிறு பெண் என்னை திரும்பி பார்த்தாள். நான், “உன்னால் நான் சொல்வதை கேட்க முடிகிறதா முடிகிறதா?” என்று கேட்டேன். மொழிபெயர்ப்பாளர் அவளுடன் பேச ஆரம்பித்தார், அவளால் - அவளால் கேட்கவும் முடிந்தது, பேசவும் முடிந்தது. அவள் அப்படியாக ஏதோவொன்றை முணு முணுக்க ஆரம்பித்தாள். நான், “ஓ, இன்னும் சிறிது நேரத்தில் இவள் நன்றாகவே பேசுவாள்” என்றேன். அவள், “ம்ம்ம்ம். இவள் இப்போதே நன்றாக பேசுகிறாள்” என்றாள். எனவே அவள்... 17. வரிசையில் அடுத்ததாக குறுக்கு கண்களுடன் (cross-eyed கண்களில் உள்ள இரண்டு கருவிழிகளும் ஒன்று ஒருப்பக்கமாகவும் இன்னொன்று வேறு பக்கமாகவும் இருக்கும்] ஒரு சிறு பையன் வந்தான். அவனுக்கு குறுக்கு கண்கள் இருந்ததை எல்லாராலும் பார்க்க முடியும். இதுவரை குறுக்கு கண்களை கொண்ட பிள்ளைகளை தேவன் சுகமாக்காமல் விட்டுவிட்டதை நான் ஒரு போதுமே கண்டதில்லை. ஒருபோதுமே. எனவே அதற்கு காரணம் என்னவென்று நான் நினைக்கிறேன் என்றால்: அதுபோன்றதை பார்த்த மிகவும் பயங்கரமான ஒரு அனுபவம் எனக்கிருந்தது. என்னுடைய சிறு ஷேரோன், பல, பல வருடங்களுக்கு முன்பு என்னுடைய சிறு குழந்தை மருத்துவமனையில் மரித்துக்கொண்டிருக்கையில், சிறு குழந்தை மிகவும் கடினமான வேதனையை அனுபவித்தாள், நான் அவளிடம் சென்றபோது, அவளுடைய சிறு நீல நிற கண்கள் குறுக்காகி விட்டது, எனவே ஒரு குறுக்கு கண்களை கொண்ட பிள்ளையை பார்க்கும்போது அது என்னை கொன்றுவிடுகிறது. அதை பற்றி நான் நினைத்து பார்க்கிறேன். சில நேரங்களில் நீங்கள் புஷ்பத்திலிருந்து நறுமணத்தை வெளியே கொண்டுவர அதை நசுக்கி கசக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள், இல்லையா? அங்கே, அந்த சிறு பையன் என்னை நோக்கி பார்த்தான், அவனுடைய சிறு கரடுமுரடான, குதிரை முடி போன்ற முடி கீழே தொங்கிக்கொண்டிருந்தது. சிறு சிவந்த முகத்துடன், அவன் என்னை நோக்கி பார்த்தான். அந்த சிறு பையனை நான் தூக்கிக்கொண்டேன். "இப்போது, இந்த இந்தியர்களுக்கு முன்பாக தேவன் அதை செய்தாரென்றால், அது சாதகமாக இருக்கும்” என்று நான் நினைத்தேன். நான் அந்த சிறு பையனை என் மீதாக வைத்துக்கொண்டு, “அன்பான தேவனே, தயவு செய்து இரக்கமாயிரும். உம்முடைய நேசகுமாரனை பற்றி இவர்களிடம் நான் கூறும்படியாக, இந்த சிறு பையனை நீர் சுகமாக்கி, இந்த ஜனங்களுக்கு முன்பாக ஆதரவு தர வேண்டுமென்று நான் உம்மிடம் ஜெபிக்கிறேன்” என்று கூறினேன். 'நிச்சயமாக, மொழி பெயர்ப்பாளர் அதை மொழி பெயர்க்கவில்லை. அவர்கள் அங்கே நின்று கவனித்துக்கொண்டிருந்தார்கள். தேவன் அந்த சிறு குழந்தையை சுகமாக்கிவிட்டார் என்பதை நான் அறிவேன். நான் கூறினேன்... இப்போது, அவனை என் தோளை விட்டு இறக்குவதற்கு முன்பு, நான், "இப்போது, அவர்கள் எல்லாரையும் இந்த பக்கமாக பார்க்க சொல்லுங்கள்” என்றேன். அவர்கள் அந்த பக்கமாக பார்த்தார்கள். “இப்போது, இந்த சிறு குறுக்கு கண்களை கொண்ட பையனை தேவன் சுகமாக்கினால், நீங்கள் விசுவாசிப்பீர்களா?” என்று நான் கேட்டேன். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டி ருந்தார்கள், உங்களுக்கு தெரியும், அவர்கள் ஒரு வார்த்தைக்கூட சொல்ல வில்லை. நான் அப்படியாக அவனுடைய சிறு முகத்தை திருப்பினேன், இங்கே இருப்பவர்களின் கண்கள் சாதாரணமாக இருப்பது போல அவனுடைய கண்களும் சாதரணமாக இருந்தது. என்னே, நீங்கள் ஒரு ஜெப வரிசையை பற்றி பேசினால்; சில நிமிடங்களுக்குள் என்னிடம் ஒரு பெரிய ஜெப வரிசையே வந்துவிட்டது பார்ப்பதற்கு புழுதி பறக்கபறக்க, கூட்டநெரிசலாகி தள்ளுமுள்ளாகி விட்டது போன்றிருந்தது. அவர்கள் வெளியே தூக்கி எறிய வேண்டியிருந்தது... ரெவரெண்ட் ஜாக் மூரை எத்தனை பேருக்கு தெரியும்? மா... உங்களில் சிலருக்கு தெரியும் என்று நான் நினைக்கிறேன், மேலும் கார்டன் லின்ட்சேவும் மற்றவர்களும் அங்கே இருந்தார்கள். எனவே அங்கே... ஜெப வரிசை வந்து கொண்டிருந்தது. 18. இந்த அடுத்த வயதான இந்திய பெண், அவளை அமைதிப்படுத்த அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். அவளிடம் இரண்டு துடைப்ப குச்சிகள் இருந்தன அல்லது ஏதோவொரு விதமான கட்டைகள் இருந்தன, ஊன்றுகோலுக்கென்று அவர்கள் கந்தை துணிகளை அதின் மேல் சுற்றியிருந்தார்கள். அவளுக்கு சுமார் எழுபத்தி ஐந்து அல்லது எண்பது வயது போன்றிருந்தது. அவளுடைய நீளமான சடைமுடி தொங்கிக்கொண்டிருந்தது, அவளுடைய முடி பதனிட்ட தோலினால் (leather) பின்னப்பட்டிருந்தது. வரிசையில் அவள்தான் அடுத்து வரவேண்டும். ஆனால் அவர்கள் மேடையின் மீது கும்பலாக சேர்ந்துக் கொண்டும் தள்ளிக்கொண்டும் இருந்தார்கள், அவர்களை கட்டுப்படுத்த ஒரு கூட்ட இந்தியர்களை அவர்கள் மேலே நிற்க வைத்திருந்தார்கள். எனவே அங்கே ஒரு வாலிப இந்திய பையன் மேடை மீது எகிறி குதித்து, இங்கே குதித்து வந்துவிட்டான், அடுத்தது வரப்போவது அவன்தான். சரி, பின்னாடி போ என்று சகோதரன் மூரினால் அவனிடம் சொல்ல முடியவில்லை, நல்லது சகோதரன் மூர் ஒரு விதத்தில் கொஞ்சம் குள்ளமான, தடிமனான, ஐரிஷ் மனிதன். இந்த பெண் அடுத்ததாக வரும்படி அவர் அப்படியே அவனுடைய பக்கவாட்டை பிடித்து தூக்கி அவனை பின்னாடி வைத்தார். அடுத்து வருவது அவள்தான். எனவே, இதோ அவள் வருகிறாள். அந்த வயதான பரிதாபமான பெண், அவள் இந்த ஊன்றுகோல்களை முன்னே வைத்து, அவள்... கீல்வாதம், உங்களுக்கு தெரியும், மிகவும் மோசமாக இருந்தது. அவளுடைய அருமையான இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக, என்றோ ஓர் நாளில் அவளை நான் மகிமையில் சந்திக்கப்போகிறேன் என்று நான் நம்புகிறேன். அவள் அப்படியாக, என் பக்கத்தில் வந்தபோது, அவள் என்னை நோக்கிப்பார்த்தாள், அவளுடைய முகத்திலிருந்த அந்த மிக ஆழமான சுருக்கங்கள், ஒரு வயதான தாய். அந்த ஆழமான சுருக்கங்களின் வழியாக அந்த கண்ணீர்கள் வழிந்தோட, அந்த பாலைவனத்தில் பல கடினமான நாட்கள் இருந்தன, ஒரு வயதான தாயார் அநேகமாக தன்னுடைய குழந்தைகளை பல முறை அவள் தாலாட்டியிருந்திருப்பாள், மேலும் அவர்களுக்கு என்ன கிடைத்ததோ அதை கொண்டு வாழ்ந்திருப்பார்கள். அவள் அப்படியாக என்னை நோக்கிப்பார்த்தாள், அவளுடைய உதடுகள் நடுங்கின. அவள் அன்பாக புன்னகைத்து, தன்னுடைய கண்களை சிமிட்டினாள். கையை நீட்டி ஒரு ஊன்று கோலை பிடித்து, இன்னொன்றையும் தன்னுடைய கையில் வைத்து, என்னிடமாக கொடுத்துவிட்டு, நிமிர்ந்து நின்று, சாதாரணமாக அந்த மேடை மீது முழுவதுமாக நடந்து சென்றாள். அது என்ன? அவளுக்கென்று ஜெபம் ஏறெடுக்கப்படவில்லை, ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டுமென்று கூட கேட்கப்படவில்லை. அவளுடைய விசுவாசத்திற்காக தேவன் அவளுக்கு பலனளித்தார். அந்த இந்திய கூட்டத்தை பற்றி பேசி முடிப்பதற்கு முன்பாக இன்னும் ஒரு காரியம். 19. அது காலை சுமார் மூன்று மணியாயிருந்தது. இந்தியர்கள் வருவதை நான் கவனித்தேன், இந்தப்பக்கமாக அவர்கள் நனைந்துபோய் ஈரமாக இருந்தார்கள். நான், “என்ன ஆனது?” என்று கேட்டேன். மொழி பெயர்ப்பாளர் கூறினார், "இது போலியானது என்று அவர்கள் முதலில் நினைத்தார்கள்.” ஆனால், "இப்போதோ, அவர்கள் பாலைவனங்களுக்கு சென்று தங்களுக்கு அன்பானவர்களை அழைத்து வருகிறார்கள். ஆற்றை கடக்கும் பாதுகாப்பான இடம் (ford) இங்கிருந்து சுமார் இருபது மைல்கள் தூரத்திலிருக்கிறது. எனவே அவர்கள் ஆற்றை கடக்கும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் அளவுக்கு பொறுமையாக இல்லை; எனவே அவர்கள் அவர்களை அழைத்துக் கொண்டு, ஆற்றை அப்படியே கடந்து வந்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார். ஆகவே நான் பார்த்தேன், வரிசை வந்துக்கொண்டிருந்த போது அங்கே ஒரு மிக பெரிய ஆள் நின்றிருந்தான், பார்ப்பதற்கு நல்ல திடகாத் திரமான உடலமைப்பு கொண்ட இந்தியன், அவனுடைய உதடுகள் நீல நிறமாக இருந்தன. அந்த பாலைவனங்கள் காலைப்பொழுதில் அப்படியாக குளிர்ந்து இருக்கும். அவன் அப்படியே குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். நான் பார்த்தேன், அவனிடம் ஒரு மிகப் பெரிய அகலமான பலகை இருந்தது, இந்த பக்கம் குறுக்காக ஒரு கோலுடனும், அந்தப்பக்கம் குறுக்காக ஒரு கோலுடனும் இருந்தது, ஒரு வயதான மனிதன் தன்னுடைய கைகளை இந்த கோலின் மீதும், கால்களை அந்த கோலின் மீதும் நீட்டியவாறு படுத்திருந்தார். இன்னொரு மனிதனும் அதை தூக்கி வந்திருந்தார். தூக்குபடுக்கைகள் (stretchers) இல்லை, அதை அவர்கள் அப்படியே தூக்குபடுக்கையாக பயன்படுத்தினார்கள். நான், “உன்னால் ஆங்கிலத்தில் பேச முடியுமா?” என்று கேட்டேன். அவன், “கொஞ்சமாக” என்றான். [சகோதரன் பிரன்ஹாம் அவன் உச்சரிப்பது போன்றே உச்சரித்து காண்பிக்கிறார்] நான், “உனக்கு நிமோனியா வந்துவிடும் என்று உனக்கு பயமாக இல்லையா?” என்றே கேட்டேன். "இல்லை. இயேசு கிறிஸ்து என்னை பார்த்துக் கொள்வார். என் அப்பாவை நான் அழைத்து வந்திருக்கிறேன் என்றான்.” “ஓ, அவ்வளவுதான்” என்றேன். நான், “உன் அப்பாவை சுகப்படுத்தும் படி நான் இயேசுவிடம் கேட்டால், அவரை சுகப்படுத்துவார் என்பதை நீ விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டேன். “ஆம், அதனால்தான் நான் அவரை அழைத்து வந்தேன் என்றான்.” நான், “அவரை முன்னே அழைத்து வா” என்றேன். அவன் நகர்ந்து சென்றபோது, நான் என்னுடைய கைகளை அந்த வயதான மனிதனின் மீது வைத்தேன்; நான், “அன்பான தேவனே, இங்கே மிகவும் முதிர்ந்த ஒரு வயதான தகப்பன், பரிதாபமாக, முடமாக, முடக்கு வாதத்தால் அப்படியாக நடுங்கிக்கொண்டிருக்கிறார்” என்றேன், “இவர் மீது இரக்கமாயிரும், தேவனே, இவரைசுகமாக்கும், இயேசுவின் நாமத்தால் ஜெபிக்கிறேன்” என்று கூறினேன். நான், "இப்போது, இவரை அழைத்துசெல். நீ விசுவாசிக்கிறபடியே, அது நடக்கும்” என்றேன். நான் வேறொருவரை அழைத்தேன், அடுத்த நபர் வந்தார். நான் மிகமிக சோர்வாயிருந்ததால் என்னால் அங்கு நிற்கவே முடியவில்லை. கத்திகூச்சலிட்டு சென்று கொண்டிருந்த ... யாரோ ஒருவரின் சத்தத்தை நான் கேட்டேன். பார்த்தபோது, அந்த வயதான மனிதன் தன்னுடைய சொந்த தோளின் மீது அந்த பலகையை வைத்துக்கொண்டு, சென்று கொண்டிருந்தார், அப்படியாக கைகளை எல்லாரிடமும் அசைத்துக் கொண்டு, அப்படியே நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வளவு எளிமையாக. ஆனால் நீங்களோ அதை முழுவதும் ஆராய்ந்து புரிந்துகொள்ளவும், அது எப்படி நடக்கிறது என்பதை புரிந்துகொள்ளவும் முயற்சிக்கிறீர்கள், நீங்கள் அதை தவற விடுவதற்கு அதுதான் காரணம். அது உண்மை. அவர்கள் எளிமையாக விசுவாசித்தார்கள். 20. இப்போது, அதுதான் விசுவாசத்தின் எளிமையாக இருக்கிறது. ஆனால் இந்த காலங்களில் இஸ்ரவேலோ தேவனை விட்டு பின்வாங்கியிருந்தார்கள், மேலும் விசுவாசத்தை தேடி கண்டுபிடிப்பது என்பது மிக அரிதாக (scarce) இருந்தது. எனவே அங்கே யோசபாத் என்கிற ஒரு மனிதன் இருந்தான், அவன் ஒரு நீதிமான், யூதாவின் இராஜா. அவன் சென்றிருந்தான், மேலும் ஆகாப் இராஜா, அவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தான் என்பது உங்களுக்கு தெரியும்... மேலும் தீர்க்கதரிசியாகிய எலியா, அவனை பற்றி - அவனை பற்றியும், யேசபேல் மூலமாக அவன் எடுத்துக்கொண்ட அந்த தோட்டத்தை பற்றியும் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தான். நாபோத்தை கொன்று, இந்த திராட்சத்தோட்டத்தை எடுத்துகொண்டான். “நாய்கள் உன்னுடைய இரத்தத்தை நக்கும்” என்று எலிசா கூறியிருந்தான். அவனுடைய சொந்த இரத்தத்தை நாய்கள் நக்கும் என்று தேவனால் அனுப்பப்பட்ட ஒரு தீர்க்கதரிசி, அவனிடம் கூறியிருந்தான், ஏனெனில் அவன் இந்த நீதிமானுக்கு எப்படியாய் செய்து, ஏமாற்றி அவனுடைய திராட்சத்தோட்டத்தை எடுத்துக் கொண்டான். அதன்பின், அவனுடைய குமாரனாகிய யோராம் வந்து, தன்னுடைய தகப்பனுடைய இடத்தை எடுத்துக் கொண்டான், அவன் ஒரு துன்மார்க்கனாயிருந்தான், எகிப்தின் சிறு இளவரசியாகிய அவனுடைய தாயாகிய யேசபேலின் விக்கிரகங்களை இன்னுமாக தொழுது கொண்டிருந்தான். அவர்கள் தங்களுடைய இனத்தாரை விட்டுவிட்டு வெளியே திருமணம் செய்தார்கள், அதுதான் அந்த பிரச்சனைக்கான காரணம். உன்னுடைய வீட்டிலும் அது அதே பிரச்சனையைதான் கொண்டுவரும். அவிசுவாசிகளிலிருந்து விவாகம் செய்து, பின்பு என்ன நடக்கிறது என்பதை கவனித்துப்பார். சரியாக அப்போதே அந்த இடத்திலேயே உன்னுடைய ஜெயத்தை நீ இழந்துவிடுகிறாய். 21. கவனியுங்கள். அப்போது, அவர்கள் புறப்பட்டபோது, ஒரு அவிசுவாசியாகிய அவனை போன்ற ஒரு நபருடன் கூட்டணி வைத்துக் கொண்டதால், யோசபாத் என்னே ஒரு தவறை செய்துவிட்டான். நாம் ரஷ்யாவோடு கூட்டணி வைத்து, நம்முடைய எல்லா விமானங் களையும் மற்றவைகளையும் அந்த மற்றவொரு யுத்தம் நடக்கையில் அவர்க ளுக்கு அனுப்பிவைத்த போது நாம் என்ன பிரச்சனைக் குள்ளானோமோ, அவனும் அதே பிரச்சனைக்குள்ளானான். இப்போது, அவர்கள் அவைகளை திரும்பவும் நம் பக்கம் பறக்க வைத்து, அவைகளை நம் மீது சுடப்போகிறார்கள். பாருங்கள்? “இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய எப்படி ஒருமித்து நடந்து போவார்கள்?". பிரசங்கிக்கப்பட்ட கிறிஸ்துவின் சிலுவையை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை, எனவே இப்போது நமக்கு கிடைத்தது இரட்டைத் தனையான நம்பிக்கை துரோகமே (double-cross). அது முற்றிலுமான உண்மை. அங்கேயும் அதே சம்பவம்தான் நடந்தது. அங்கே யோசபாத் அந்த - அந்த, எருசலேம் இராஜாவாகிய இராஜா யோராமோடு புறப்பட்டான், அவர்கள் அந்த -- இராஜாக்களோடு அல்லது பெலிஸ்தியர்களோடு இல்லை மோவாபியர்களோடு யுத்தம் பண்ணும்படி புறப்பட்டு போனார்கள். அவர்கள் ஏழு நாட்கள் சென்றார்கள்... இப்போது கவனியுங்கள், வேலைகளில் முழுவதுமாக மூழ்கியிருந்ததால், தேவனிடம் ஆலோசனை கேட்கும்படி நிற்கவே இல்லை. இன்றிரவு இந்தக் கூட்டத்திற்கு நீங்கள் வந்தபோது, நீங்கள் வியாதியாயிருந்தால், நீங்கள் வந்து, "இப்போது, பிதாவே, நான் அங்கே செல்கிறேன். என் மீது நீர் இரக்கமாயிருக்க வேண்டுமென்றும், இன்றிரவு உம்முடைய குமாரனை விசுவாசித்து, சுகத்தை பெற்றுக் கொள்ளும் இடம்மட்டுமாக என்னுடைய விசுவாசம் உயர வேண்டு மென்றும் நான் கேட்கிறேன்,” என்று கூறினீர்களா. இங்கே கானர்ஸ்வில்லில் (Comersville) கூட்டம் நடக்கப்போகிறது என்பதை நீங்கள் கேள்விபட்டவுடன் நீங்கள் ஜெபிக்க வேண்டுமென்று நினைத்தீர்களா? நீங்கள் ஜெபித்தீர்களா, சுற்றிலும் சென்று பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து, சிறு ஜெப கூட்டங்களைக் கொண்டி ருந்தீர்களா. நாம் அந்த காரியங்களையெல்லாம் மறந்துவிட்டோம், அதனால்தான் நாம் பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறோம். 22. அவர்கள் வனாந்திரத்தில் ஏழு நாட்கள் சென்றார்கள். திசை காட்டும் கருவியை கொண்டு செல்லவே இல்லை. தாங்கள் பிரச்சனைக்குள்ளானோம் என்பதை கண்டறிந்தார்கள்; அவர்கள் தேவனிடம் ஆலோசனை கேட்காமல் சென்றுவிட்டார்கள். தண்ணீர் வரக்கூடிய எல்லா இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. இன்றிரவு சபையில் இருக்கும் பிரச்சனையும் அதுதான். தண்ணீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன, இயற்கைக்கு மேம்பட்டது (supernatural) இல்லாமலே சபையை நடத்த முயற்சிக்கிறோம். சபையை வெறுமனே அதின் இயற்கைக்கு உட்பட்ட நிலையிலே நடத்த முயற்சிக்கிறோம். உலகத்தில் இருக்கும் மற்ற சபைகளை மாதிரிகளாக வைத்துக்கொள்ள முயற்சிக்கிறோம், அந்த காரணத் தால் தான் நம்மிடம் வழக்கமாக இருந்துவந்த ஆசீர்வாதங்கள் நம்மிடம் இருப்பதில்லை. “மீண்டுமாக ஒரு நல்ல பழைய பாணியிலான பரிசுத்த ஆவியின் எழுப்புதல் கூட்டத்தை பெறுவதற்கு, கூழாங்கற்கள் மீது நான் வெறும் காலோடு ஐம்பது மைல்கள் நடப்பேன்” என்று யாரோ ஒருவர் கூறினார். என்னதான் பிரச்சனை? தேவன் இன்னும் தேவனாகவே இருக்கிறார். நீங்கள் அவரிடம் கலந்தாலோசிக்கவில்லை. ஜெபியுங்கள். கண்டுபிடிப்பதற்கு அது மட்டும்தான் ஒரே வழி. ஒரு சிறிய பாடலை நாம் பாடுவது வழக்கம்: ஜெபி, ஜெபி, மேலான இடத்தை அடைந்திட அது மட்டும்தான் ஒரே வழி, ஜெபி, ஜெபி, விசுவாசமுள்ள ஜெபம் தேவனுடைய ஆசீர்வாதங்களை கீழே கொண்டு வரும். அதை செய்வதற்கு அதுமட்டும்தான் ஒரே வழி. 23. எல்லாம் சரி, ஆனால் அவர்கள் தேவனிடம் கலந்தா லோசிக்காமல் புறப்பட்டு சென்று, தங்களுக்கான தண்ணீர் இணைப்பு துண்டிக்கப் பட்டிருப்பதை கண்டுகொண்டார் கள். அவர்கள் ஒரு பாலைவனத்தின் நடுவிலே மரித்துக் கொண்டிருந்தார்கள். தேவனிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று சிந்திக்கும் அளவுக்கு போதுமான மார்க்கத்தை (religion) கொண்ட ஒருவன் அவர்களில் இருந்தான், அவன்தான் யூதாவின் இராஜாவாகிய யோசபாத், ஒரு நீதிமான். அவன், “இந்த காரியத்தை பற்றி விசாரித்தறிய எங்கேயாவது கர்த்தருடைய தீர்க்கதரிசி இல்லையா?” என்று கேட்டான். அப்போது அதைப்பற்றி யோசிப்பது என்பது காலத்தாமதமான யோசனையே, இல்லையா? "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இந்த மற்றவைக ளெல்லாம் கூட கொடுக்கப்படும்.” “எங்காவது ஒருவன் இல்லையா?” என்று கேட்டான். அவனுடைய ஊழியக்காரரில் ஒருவன் வந்து, “ஆம், எலியாவின் கைகளுக்கு தண்ணீர் வார்த்த எலிசா இங்கே இருக்கிறான்” என்றான். என்னே, நாமும் அவனிடம் ஒட்டி அவன்மீது இருப்பதை கொஞ்சமாக அவ்வப்போது எடுத்துக்கொள்ளலாம். 24. ஒரு இரவு அவ்வாறு கூறியதற்காக நான் திருத்தப் பட்டேன் என்பதை நான் நினைவுகூறுகிறேன். நான், “கிறிஸ்தவர்களாகிய நீங்கள் எல்லாரும் பாவிகள் இருக்கும் இடத்தில் உட்கார்ந்தால், பெரியம்மையைப் போல (smallpox), அது உங்கள் மீது முழுவதுமாக ஒட்டிக் கொள்ளும்” என்று கூறினேன். சரியாக அதிலிருந்து இரண்டு இரவுகள் கழித்து, அந்த அதே கூடார எழுப்புதல் கூட்டத்தில், அப்போது நான் இன்னுமாக பாப்டிஸ்டு எழுப்புதல் கூட்டங்களில் இருந்தேன், இந்த சிறிய பெண் எழுந்து நின்றாள், தலை முடியை நன்கு படிய சீவியிருந்தாள், அவளுடைய முகம் உரித்த வெங்காயம் போல பிரகாசித்தது; அவள் கூறினாள், “உங்களுக்கு பக்கத்தில் உட்கார்ந்தால், உங்கள் மீது இருப்பதை ஒட்டி எடுத்துக் கொள்ளலாம்”, என்று பிரசங்கிமார்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். அவள், “தேவனுக்கு ஸ்தோத்திரம், அது என் மீது ஒருபோதும் ஒட்டிக்கொள்ளவே இல்லை” என்றாள். “மற்றவர்கள் விலை கொடுத்து அதை பெற்றுக் கொண்டது போலவே நானும் அதற்கான விலையை கொடுத்தேன்” என்றாள். “ஓ, என்னே... நான் அமைதியாக இருப்பது நல்லது” என்று நான் நினைத்தேன். அது உண்மை. அது ஒட்டிக் கொள்ளாது; நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள விருப்பமுடை யவர்களாக இருக்க வேண்டும். 25. ஆனால் எலிசாவோ எலியாவின் கைகளுக்கு தண்ணீர் வார்த்திருந்தான். என்னே ஒரு வியக்கத்தக்க தீர்க்கதரிசி. அவன் இரட்டதனையானதை பெற்றிருந்தான். எலியாவும் எலிசாவும் மாதிரியாக இருப்பது, எனக்கு பிடிக்கும். அதை ஒரு நிமிடம் மாதிரியாக வைத்து பார்க்கலாம். பாருங்கள். அந்த வயதான தீர்க்கதரிசியாகிய எலியா, கிறிஸ்துவை பிரதிநிதித்துவப் படுத்தினான். அந்த இளம் தீர்க்கதரிசியாகிய எலிசா, சபையை - சபையை பிரதிநிதித்துவப்படுத்தினான். இப்போது, அவர்கள் ஆரம்பித்தபோது, அவர்களுடைய யாத்திரையை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எலியா எலிசாவை கண்டபோது, அவன் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்தான். அவன் தன் சால்வையை எடுத்து அவன் மேல் போட்டு, “என்னை பின்தொடர்ந்து வா" என்றான். எனவே அவன் ஏற்மாடுகளை கொன்று, ஏழைகளுக்கு விருந்துவைத்து விட்டு, எலிசாவை பின்தொடர்ந்தான். “நான் தோத்தான் வரைக்கும் போக வேண்டும்” என்று எலிசா கூறுகையில். எனவே அவன் சென்றபோது, செல்ல ஆரம்பித்தபோது, அவன் அந்த இளம் தீர்க்கதரிசியிடம், “நீ இங்கேயே இரு என்று கூறினான். அவன், “நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்” என்றான். எனக்கு அது பிடிக்கும்: அதனோடு அப்படியே தரித்து நில்லுங்கள். அவன் தொடர்ந்து சென்றான். அவன், "இப்போது, நீ இங்கேயே இரு. நான் தீர்க்கதரிசிகளின் பள்ளிக்கு போகவேண்டும்” என்றான். யாத்திரையின் இரண்டாம் கட்டம். 26. முதலாம் கட்டம்: மார்டின் லூத்தரின் கட்டம்: யாத்திரையின் முதல் கட்டம். இரண்டாம் கட்டம் தீர்க்கதரிசிகளின் பள்ளியாயிருந்தது. எலியா அங்கே சென்று, அவன் எலிசாவிடம், “இப்போது, தயவு செய்து நீ இங்கேயே இரு, ஏனெனில் கர்த்தர் என்னை யோர்தானுக்கு அழைக்கிறார்” என்று கூறினான். ஆனால் எலிசாவோ உண்மையாகவே ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன், “நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன்” என்றான். எனக்கு அது பிடிக்கும். அந்த யாத்திரையின் இரண்டாம் கட்டம் தொடர்ந்தது... தேவன் எப்போதுமே அதை செய்து வந்திருக்கிறார். கவனியுங்கள், அப்போது அவன், “நான் யோர்தானுக்கு செல்கிறேன்” என்றான். எலிசா... அந்த பள்ளியிலிருந்த சில தீர்க்கதரிசிகள், “இன்றைக்கு, உனக்கு தலைமையாயிருக்கிற எஜமான் உன்னை விட்டு எடுக்கப்பட்டுவிடுவார் என்பது உனக்கு தெரியுமா?” என்றார்கள். அவன், “எனக்கு தெரியும், சும்மா இருங்கள்” என்றான். என்ன நடக்கப்போகிறது என்பதை அவன் அறிந்திருந் தான், எனவே அவன் அவனை பின்தொடர்ந்தான். சபைக்கு பரிபூரணமான மாதிரியாக, அவன் யோர்தானுக்கு வந்தான். யாத்திரையின் முதல் கட்டம், மார்டின் லூத்தர் மூலமாக நீதிமானாக்கப்படுதல்: தோத்தான். இரண்டாம் கட்ட யாத்திரை ஜான் வெஸ்லியுடன், தீர்க்கதரிசி பள்ளியில் இருந்தது, பரிசுத்தமாக்கப்படுதல். இப்போது, அவன் யோர்தானுக்கு செல்கிறான், மரிக்க கூடிய நேரம். யோர்தான் என்றால் மரணம் என்று அர்த்தம், கடந்து செல்வது. நாம் எல்லா சபை காலங்களையும் விட்டு வெளியேறுகிறோம். 27. என்னிடமாக இங்கே மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, மற்றும் அனைவருமே உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். உங்களுக்கு விரோதமானது என்று எதுவுமே என்னிடம் இல்லை. தேவன் என் இருதயத்தை அறிவார்; மற்றவர்களில் எவரை போலவும், நீங்களும் என் சகோதரர்கள். நானும் கூட பாப்டிஸ்டு சபையின் அங்கத்தினன் தான். ஆனால் நன்மையான ஏதோவொன்றை நான் கண்டடைந்தேன். இன்னும் ஆழமாக செல்லக்கூடிய ஏதோவொன்றை பற்றியே நான் உங்களிடம் கூற முயற்சிக்கிறேன். நீங்கள், “ஆழமானது இருக்கிறதா?” என்று கேட்கலாம். நிச்சயமாக. இன்னும் மிக அதிக ஆழமானது வந்துக்கொண்டிருக்கிறது. வளரவே முடியாத இறுக்கமான நிலையை அடைந்துவிடாதீர்கள் (crystallized). இஸ்ரவேல் ஜனங்களின் அந்த பழைய யாத்திரையில், ஒவ்வொரு முறையும் அவர்கள் அந்த அக்கினி ஸ்தம்பத்தை கவனித்தார்கள். அது சரியல்லவா? அந்த அக்கினி ஸ்தம்பம் நிற்கும்போது, அவர்களும் நின்று, அதற்கு கீழாக கட்டிக்கொண்டார்கள். அவர்கள் அந்த அக்கினிக்கு கீழாக இருந்தார்கள். மேலும் அப்போது, ஆயிரம் ஆசாரியர்கள் அதை கவனித்து வந்தார்கள். ஒவ்வொரு முறையும் அந்த அக்கினி ஸ்தம்பம் நகரும்போது, அது பகல் பத்து மணியாக இருக்கலாம், இரவு பத்து மணியாக இருக்கலாம், மத்தியான நேரமாக இருக்கலாம், அது எந்த நேரமாக இருந்தாலும், அவர்கள் இந்த எக்காளங்களை முழங்குவார்கள், இஸ்ரவேல் கூடாரத்தை கலைத்துவிட்டு, அந்த வெளிச்சத்தை பின் தொடருவார்கள். அது உண்மைதானே? சரி. 28. அந்த யாத்திரையின் கட்டத்தில் அந்த அக்கினி ஸ்தம்பம் எங்கெல்லாம் சென்றதோ, இஸ்ரவேல் அதை பின்தொடர்ந்தார்கள். அது இந்த பக்கமாக சென்றால், அவர்களும் இந்த பக்கமாக சென்றார்கள். அது அந்த பக்கமாக சென்றால், அவர்களும் அந்த பக்கமாக சென்றார்கள். வலதுகை பக்கமோ அல்லது இடதோ, அவர்கள் பின்தொடர்ந்து சென்றார்கள். அழகான மாதிரி, கவனியுங்கள். முதலாம் சீர்த்திருத்தத் தின் போது, மார்டின் லூத்தர் என்று பேர்கொண்ட ஒரு சிறு மனிதன் இருந்தார், அவருடைய கண்கள் வேதவாக்கியத் தில் திறக்கப்பட்டது. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்பதை அவர் அறிந்தார். அந்த ஆயிரத்து ஐநூறு வருடம் இருண்ட காலங்களிலிருந்து அக்கினி ஸ்தம்பம் நகர ஆரம்பித்தது, அந்த அக்கினி ஸ்தம்பம் நகர்ந்து செல்வதை மார்டின் லூத்தர் கண்டார், அவர் சுவிசேஷ எக்காளத்தை முழங்கி, அதோடு கூட சென்று, அதற்கு கீழாக கட்டினார். ஆனால் அதை பற்றின பிரச்சனை என்னவென்றால், லூத்தர் அந்த சபையை ஸ்தாபனமாக்கினார். இது புண்படுத்தப்போகிறது. ஆனால், சகோதரனே, என் தாயாரை போல, அவர்கள் இன்றிரவு இங்கே இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் ஒரு சிறு பிள்ளையாக இருந்தபோது, நாங்கள் சாப்பிட வேண்டியிருந்தது, நாங்கள் கடையிலிருந்து வாங்கி வரும் எங்களுடைய இறைச்சி தோல்களை எடுத்து, அதை ஒரு - ஒரு ரொட்டி தவாவில் போட்டு, அதை நன்றாக உருக்கி (render), கொழுப்பு நெய்யை (lard) செய்து, போட்டு - அதில் கொஞ்சம் மாவை கலந்து, ஹோகேக் குகளை [தோசை போன்று தட்டையாக இருக்கும் தின்பண்டத்தின் பெயர்] செய்வோம். அப்படியென்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா இல்லை தெரியாதா என்று எனக்கு தெரியவில்லை. மோசமான காரியம் என்னவென்றால், ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் நாங்கள் அதிக அளவில் ஆமணக்கு எண்ணெயை குடிக்க வேண்டும். அந்த பெயரை சொல்லகூட எனக்கு மிக கடினமாக இருக்கிறது. எப்போதும்... நான் என் மூக்கை பிடித்துக்கொள்வேன்; எனக்கு குமட்டல் வந்துவிடும்; நான், “அம்மா, என்னால் அதை குடிக்க முடியாது. அது எனக்கு மிக அதிகமாக குமட்டலை தரும்" என்று கூறுவேன். “தேனே, அது உனக்கு குமட்டலை ஏற்படுத்தவில்லையென்றால், அது உனக்கு எந்த நன்மையுமே செய்யாது” என்று அவர்கள் கூறுவார்கள். எனவே இன்றிரவும் அதே காரியம்தான் என்று நான் கூறுவேன். அநேகமாக, இது உங்களுக்கு மிகமிக அதிகமான குமட்டலுணர்ச்சியை தரவில்லையென்றால், இது உங்களுக்கு நன்மை செய்யாது. எல்லாம் சரி. 29. தேவன் ஒருபோதும் ஸ்தாபனங்களோடு ஈடுபட்டதே கிடையாது. தேவன் மனிதர்களோடு ஈடுப்படுகிறார். பரிசுத்த ஆவி ஒருபோதும் ஒரு ஸ்தாபனத்தின் மீது விழுந்ததே கிடையாது, அது மனிதர்கள் மேல் தான் விழுந்தது. அது உண்மை. கவனியுங்கள், முதன் முதலில் ஸ்தாபன மாக்கப்பட்ட சபை தாய் சபை, கத்தோலிக்க சபைதான். மற்றவைகள் எல்லாம் அதிலிருந்து பிறந்தவைகளே. இப்போது, ஆனால் “சபை” என்ற வார்த்தைக்கு “வெளியே அழைக்கப்பட்டது, வேறு பிரிக்கப் பட்டது” என்று அர்த்தம். இப்போது, கவனியுங்கள். அப்போது லூத்தரன், அந்த மாதிரி, அவர் அந்த லூத்தரன் சபையை ஸ்தாபனமாக்கினார். ஒருநாள் அந்த அக்கினி ஸ்தம்பம் வெளியே நகர்ந்து சென்று விட்டது. லூத்தர் மிகவும் ஸ்தாபனமாக இருந்ததாலும், அவருடைய சடங்குகளையும் மற்றவை களையும் கொண்டிருந்ததாலும், அவரால் அதனோடு நகர்ந்து செல்ல முடியவில்லை. 30. எனவே இங்கிலாந்தில் ஜான் வெஸ்லி என்று பெயர் கொண்ட ஒரு சிறு மனிதன், அவர் அந்த அக்கினி ஸ்தம்பம் நகர்வதை கண்டார், அவர் அதோடுகூட உடன் சென்று, பரிசுத்தமாக்கப்படுதலை பிரசங்கித்தார். லூத்தரால் பரிசுத்தமாக்கப்படுதலை பிரசங்கிக்க முடியவில்லை, ‘ஏனெனில் அவர் நீதிமானாக்கப்படுதலை பிரசங்கித்தார். எனவே வெஸ்லி பரிசுத்தமாக்கப்படுதலை பிரசங்கிக்க ஆரம்பித்தார், அவர்கள் அதை பின்தொடர்ந்தார்கள். அந்த அக்கினி நகர ஆரம்பித்தது. சரி பின்பு, உங்களுக்கு தெரிய வேண்டிய முதல் காரியம், வெஸ்லி மிகவும் ஸ்தாபனமானார். நீங்கள் ஒரு வெஸ்லி மெத்தோடிஸ்டாக இருக்க வேண்டும், இல்லையென்றால் அவன் ஒன்றுமே இல்லை; நீங்கள் அதில் இல்லை. அது உண்மை. பின்பு அதிலிருந்து இந்த மற்ற சிறிய கிளைகள் முளைத்தன. ஒரு நாள், அந்த அக்கினி ஸ்தம்பம் அதை விட்டு நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. பெந்தெகொஸ்தே குழுவினர் அதை கண்டார்கள். ஏனெனில் அந்நிய பாஷைகளில் பேசுவ தையும், ஆவியின் வரங்களையும், மற்றவைகளையும் வெஸ்லியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவை - அவர் அங்கேயே தரித்திருக்க வேண்டி யிருந்தது: அவர் அதற்கு எதிராக போதித்தார். ஏனெனில் அவரால் நகரவே முடியாத அளவுக்கு அவர் மிகவும் இறுக்கமான ஸ்தாபன மாக்கிக்கொண்டார், அந்த அக்கினி ஸ்தம்பம் அவரை விட்டு தூரமாக நகர்ந்து விட்டது. பெந்தெகொஸ்தேயினர் அதனோடு நகர்ந்தார்கள். அது உண்மை. ஆனால் இப்போதோ இங்கே, இப்போது பெந்தெகொஸ்தேயினரும் மிகவும் இறுக்கமான ஸ்தாபனமாக்கிக் கொண்டார்கள், அந்த அக்கினி ஸ்தம்பம் மீண்டும் நகர்ந்து கொண்டிருக்கிறது, அவர்களாலோ நகர முடியவில்லை. அது மிகவும் முற்றிலுமான உண்மை. ஆமென். ஆனால் சகோதரர்களே, தேவனுடைய அக்கினி மாறாமல் நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. [ஒலிநாடாவில் காலியிடம்] மாறாமல். தேவன்... 31. இங்கே பாருங்கள். நியாயப்பிரமாணத்தை கட்டளை யிட்ட (law - giver) மோசே, ஒரு ஸ்தாபனமாக்கப்பட்ட சபையாயிருந்தான். நியாயப்பிரமாணத்தை கட்டளையிட்ட மோசே, தேவனை மகிமைப்படுத்துவதற்கு பதிலாக தன்னை மகிமைப்படுத்திக் கொண்டான், எனவே பிள்ளைகளை யோர்தானை கடந்து அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை (எண்ணா-20:12). இன்றைக்கு சபையானது தன்னைத்தானே மகிமைப்படுத்திக் கொள்கிறது: “நான் அசெம்பிளிசை சேர்ந்தவன்” “நான் தேவனுடைய சபையை சேர்ந்தவன்” “நான் இதை, அதை அல்லது மற்றதை சேர்ந்தவன்.” என்னவாயினும் நீங்கள் யார்? அது சரி. அதுதான் உண்மை. இப்போது, அவை ஒவ்வொன்றிலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். நாம் சகோதரர்கள்; அந்த காரியத்தை உடைத்துப்போடுங்கள். ஆனால் பாருங்கள். அவர்களுடன் ஆரம்பத்திலிருந்து கூடவே இருந்த ஒரு மனிதன், யோசுவா, அற்புதங்களுக்கும் அடையாளங்களுக்கும் ஒரு மாதிரியாயிருந்தான், அவன் ஒருவன்தான் அனுமதிக்கப்பட்டான், சபைக்குழு அனுமதிக்கப்படவில்லை, ஸ்தாபனம் அனுமதிக்கப்பட வில்லை, ஆனால் யோசுவாவோ வெளியே இழுக்கப் பட்டான், இஸ்ரவேல் பிள்ளைகளை யோர்தானை கடந்து அழைத்துச்சென்றான். அது சரி. ஆமென். 32. கவனியுங்கள், என்னுடைய வேதவாக்கியத்திற்கு திரும் பலாம். இன்றிரவு முழுவதும் பிரசங்கிக்கலாம் போன்று எனக்கு தோன்றுகிறது. பாருங்கள். நான்... இங்கே பாருங்கள். அவன் முதல் பயணத்தை செய்தபோது, அவன் சபையை கண்டபோது, அந்த முதலாம் கட்டம் நீதிமானாக் கப்படுதலாய் அங்கே இருந்தது. ஜான் வெஸ்லி, நான் லூத்தரின் காலம் என்று கூறவந்தேன். இரண்டாம் கட்டம், தீர்க்கதரிசிகளின் பள்ளி, பரிசுத்தமாக்கப்படுதல், வெஸ்லி யின் காலம். பள்ளிகளும், ஸ்தாபனங்களும் மற்றவைகளும் இருந்தன. மூன்றாம் கட்டம், பெந்தெகொஸ்தேயினர், ஆற்றை கடப்பதாக இருந்தது. கவனியுங்கள், அவன் அங்கே வந்தடைந்தபோது. அவனுக்கு முன்பாக யோர்தான் நின்றது. அவன் தன் சால்வையை எடுத்து, அந்த தண்ணீரை அடித்து, கடந்து சென்றான். அவன், “இப்போது... (ஓ, என்னே)”, “இப்போது நீ கடந்து வந்துவிட்டாய், உன் கண்ணை என் மீது வை. இப்போது, நீ கடந்து வந்து, எல்லாவற்றிலிருந்தும் வேறுப் பிரிந்த பின்னர், உனக்கானதை நீயே செய்துகொண்ட பின்னர், உன் கண்ணை என் மீது வை” என்று கூறினான். நம்மிடம் மிக அதிகமான குறுக்கு கண்களை (cross-eyed) கொண்ட கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் (நீ அந்த விதத்தில் அதைப் புரிந்துக்கொள்ள வேண்டுமானால்...): ஒரு கண்ணை கிறிஸ்துவின் மீதும், மற்றொன்றை உலகத்தின் மீதும் வைத்திருக்கிறாய். அப்படியாக வைக்காதே. அவரை மட்டும் நோக்கிப்பார். “என் பக்கத்துவீட்டுக்காரர் அதைப் பற்றி என்ன சொல்கிறார் என்று நான் பார்க்கிறேன். இந்த நபர் அதைப்பற்றி என்ன சொல்கிறார் என்று நான் பார்க்கிறேன்.” அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி நான் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்?. அவர்கள் உன்னை இரட்சிப்பதில்லை. தேவன்தான் உன்னை இரட்சிக்கிறார். உன் கண்ணை அவர் மீதே வை. 33. ஆற்றை கடந்து அவர்கள் சென்றார்கள். "நீ என்ன கேட்கப் போகிறாய்?" என்று கேட்டான். இதை பார்ப்பதற்கு முன்பாக, அந்த - அந்த புத்திரசுவிகாரத்தின் பிரமாணத்தை (Law of Adoption) பார்க்க நமக்கு நேரம் இருந்தால் நன்றாயிருக்கும் என்று நான் விரும்புகிறேன். குமாரனைப் போல பெந்தெகொஸ்தேயினர் பிறந்து விட்டார்கள் (அது சரி). ஆனால் குடும்பத்தில் பிறந்த அந்த அதே குமாரன், அவன் சுவிகாரப்புத்திரனாகவும் (adopted) ஆக வேண்டும். அது சரி. நண்பனே, அங்கேதான் உன்னு டைய அழைப்பை நீ இழந்துவிட்டாய். புத்திரசுவிகாரத்தின் நேரம் வரும்போது, அந்த பிள்ளையை வளர்த்த அந்த உபாத்தியர், அந்த பிள்ளை தகுதியானதல்ல என்பதை கண்டறிந்தால், அவர்கள் நிச்சயமாக இன்னமும் ஒரு குமாரன்தான், ஆனால் அவர்களுடைய புத்திரசுவிகாரத்தை தவறவிட்டுவிட்டார்கள். ஆனால் அவர்கள் அந்த குடும்பத்துக்குள் சுவிகாரப்புத்திரனாக ஆகிவிட்டால், பின்பு அவர்கள் முழு ஐக்கியத்தோடு... அவர்களுடைய அப்பா எழுதும் காசோலையை போலவே அவர்கள் எழுதும் எந்த காசோலையுமிருக்கும். சகோதரனே, இன்றைக்கு அதுதான் பிரச்சனை. சபையானது சரியாக இப்போது புத்திரசுவிகாரத்தில் இருந்து, தேவனுடைய முழு தயவுகளுக்குள்ளும் (full favors of God) கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அந்த பிரச்சனை... தேவனால் நம்மை எதிலுமே நம்ப முடியாத அளவுக்கு நாம் மேலேயும் கீழேயும், உள்ளேயும் வெளியேயும், மேலேயும் கீழேயும், உள்ளேயும் வெளியேயுமாக இருக்கிறோம். “ஒரு நாள் நான் அசெம்பிளிசை சேர்ந்தவன், அடுத்த நாள் நான் வேறொன்றை சேர்ந்தவன். அதற்கடுத்த நாள் நான் மெத்தோடிஸ்டு, மேலும் அதற்கடுத்த நாள் நான் ஒருபாப்டிஸ்டு. ” உங்களுடைய அங்கத்தினன் அட்டையை ஒவ்வொரு சபைக்கும், ஒவ்வொரு சிறு குழுவுக்கும்... கொண்டுசெல்கிறீர்கள். நீங்கள் அந்த குழுவுக்குள் சென்று, “நான் ஒரு பாப்டிஸ்டு” என்கிறீர்கள், உங்களுக்கு தெரிய வேண்டிய முதல் காரியம், யாராவது என்னை கோபப் படுத்தி விட்டால், டீக்கன்கள் என்னோடு வாக்குவாதம் செய்துவிட்டால், நான் விசுவாசிக்காத ஏதோவொன்றை அந்த பாஸ்டர் கூறிவிட்டால் போதும், நான் என்னுடைய அங்கத்தினன் அட்டையை எடுத்துக்கொண்டு, மெத்தோடிஸ்டுக்கு சென்று விடுவேன். மெத்தோடிஸ்டுகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், அவைகளை நான் எடுத்துக் கொண்டு, மெ - அசெம்பிளிஸுக்கு அல்லது தேவனுடைய சபைக்கு (Church of God) சென்று விடுவேன்.” உங்களுடைய அங்கத்தினன் அட்டை கிழிந்து போகும் அளவுக்கு நீங்கள் அதை எடுத்து சென்றிருக்கிறீர்கள். உங்களுடைய பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படும்படி செய்து, அதை மறந்து விடுங்கள். அது சரி. நான் பிரன்ஹாம் குடும்பத்தில் நாற்பத்தி-நான்கு ஆண்டுகளாக இருந்து வருகிறேன், இந்த குடும்பத்தில் சேர்ந்துகொள் என்று அவர்கள் ஒருபோதும் என்னிடம் கூறினதே இல்லை. நான் அதில் பிறந்தேன். நான் பிறக்கும் போதே ஒரு பிரன்ஹாமாய் இருந்தேன். நீங்களும் பிறக்கும் போதே ஒரு கிறிஸ்தவராக இருக்கிறீர்கள். அல்லேலூயா. நீங்கள் தேவனுடைய குடும்பத்தில் சேருவது கிடையாது. நீங்கள் தேவனுடைய குடும்பத்தில் பிறக்கிறீர்கள். அது சரி. எல்லாம் சரி. 34. கவனியுங்கள், அவன், “உனக்கு இப்போது என்ன வேண்டுமோ அதை என்னிடம் கேள், நான் அதை உனக்கு தருவேன்” என்றான். கவனியுங்கள். அவன் கேட்பதற்கு பயப்படவே இல்லை. அவன், "இரட்டிப்பான உம்முடைய ஆவி” என்றான். ஆமென். எனக்கு அது பிடிக்கும். மிகுதியாய் கேளுங்கள். பெரிய காரியங்களை கேளுங்கள். பெரிய காரியங்களுக்காக விசுவாசியுங்கள். “இரட்டிப்பான உம்முடைய ஆவி” என்றான். அவன், "அரிதான காரியத்தைக் கேட்டாய், நான் போகும்போது நீ என்னைக் கண்டால் உனக்கு கிடைக்கும், இல்லாவிட்டால் கிடையாது” என்று கூறினான். ஓ என்னே. நான் உங்களிடம் கூறுகிறேன், அவனிடம் ஒரே ஒரு எண்ணம்மட்டுதான் இருந்தது. அந்த தீர்க்கதரிசி இவனு டைய பார்வையை விட்டு விலகவேயில்லை. அவன் சரியாக அவனோடு தரித்திருந்து, அவனை கவனித்துக் கொண்டே இருந்தான். அவன் தொடர்ந்து சென்றான், அவன் தொடர்ந்து சென்றான். மலை மீது ஏறினான், பள்ளத்தாக்கில் இறங் கினான். மலை மீது ஏறினான் பள்ளத்தாக்கில் இறங்கினான், ஆனால் அவனோ தன்னுடைய கண்ணை அந்த தீர்க்கதரிசி மீதே வைத்திருந்தான். சிறிது நேரம் கழித்து, அவர்கள் ஒரு குன்றின் மீது ஏறினார்கள், பரலோகத்தில் இருந்து ஒரு அக்கினி இரதம் வந்து, அவர்களை தனித்தனியாக பிரித்தது. எலியா அந்த இரதத்தின் மீது ஏறி, எலியாவை திரும்பி பார்த்து, அவனுடைய சால்வையை எடுத்து, அதை அவனிடமாக பின்னாடி வீசிவிட்டு, அவன் அப்படியே பரலோகத்திற்குள் சென்று விட்டான். எலியா அந்த சால்வையை எடுத்துக்கொண்டு யோர்தா னுக்கு சென்று, அங்கே நின்றான், அங்கே அந்த தீர்க்கதரிசி பள்ளியிலிருந்து, அவன் என்ன செய்யப்போகிறான் என்று அவர்கள் அவனை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் அந்த சால்வையை எடுத்து அதை முன்னும் பின்னும் முறுக்கி அந்த பழைய யோர்தானின் மீது அடித்து, “எலியாவின் தேவன் எங்கே?” என்றான். உடனே அது இந்த பக்கமாகவும் அந்த பக்கமாகவும் பிரிந்தது: லூத்தரன் காலத்தினூ டாகவும், மெத்தோடிஸ்டு காலத்தினூடாகவும், பெந்தெகொஸ்தே காலத்தினூடாகவும் கடந்து வந்து, இப்போது யோர்தானை கடந்து கொண்டிருக்கிற சபைக்கு ஒரு அழகான மாதிரியாய் இருந்தது. 35. உன் கண்ணை இயேசுவின் மீதே வைத்திரு. கவனி யுங்கள். இயேசு அந்த சபைக்கு ஒரு மாதிரியாயிருந்தார். அவர் ஒரு நாள் நின்றிருந்தார், ஒரு ஸ்திரீ ஓடிவந்து, “நல்லது, என்னுடைய குமாரன் இந்த பக்கத்திலும், இன்னொருவன் அந்த பக்கத்திலும் உட்கார்ந்திருக்க வேண்டும்” என்று கேட்டாள். “நான் குடிக்கும் பாத்திரத்தில் உங்களால் குடிக்க முடியுமா?” என்று கேட்டார். அவள், "முடியும், ஆண்டவரே” என்றாள். “உங்களால் நிச்சயமாகவே முடியும். ஆனால் நான் பெற்ற ஸ்நானத்தை உங்களால் பெற கூடுமா?” என்றார். அவள், “கூடும், ஆண்டவரே” என்றாள். “உங்களால் நிச்சயமாகவே கூடும். ஆனால் வலது பாரிசத்தையும், இடது பாரிசத்தையும் கொடுப்பது என் காரியமல்ல, ஆனால் பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினுடைய காரியமாயிருக்கிறது” என்று கூறினார். இப்போது, அவர் அவர்களை ஒன்று சேர்த்து, அவர்கள் செல்வதற்கு சற்று முன்னர் அவர்களை ஆசீர்வதித்தார். அவர், “நீங்களோ உன்னதத்தில் இருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் காத்திருங்கள். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இவைகளை பார்க்கிலும் பெரிய கிரியைகளை செய்வீர்கள்”என்றார். சபைக்கு இரட்டிப்பான பங்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது. நான் உங்களிடம் கூறுகிறேன், அவர்கள் அந்த மேல் வீட்டறைக்கு சென்று, இயேசுவானவர் மேலே எடுக்கப்படும் நாள் வரை - அங்கே தங்கியிருந்தார்கள் அவர் மீது இருந்த அந்த அதே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், அந்த பெந்தெகொஸ்தே ஜனங்களின் மீது விழுந்தது. அல்லேலூயா. அதுதான் உங்களுக்கான இரட்டிப்பான பங்கு. 36. ஏன், தேவனுடைய பொன்னான ஆசீர்வாதங்கள் நிரம்பிய பாத்திரத்தின் விளிம்பை முத்தமிட்டோம் என்று உரிமை கோருகிற ஜனங்களாகிய நீங்கள், அதுபோன்ற ஒரு நாளில் யாரால் தான் சும்மா உட்கார்ந்திருக்க முடியும்? ஹா, உங்கள் மத்தியில் இரட்டிப்பான பங்கை பெற்றிருக்கும் போது. இயேசு கிறிஸ்துவில் இருந்த அந்த தேவன் எங்கே? அவர் எங்கே இருக்கிறார்? ஜனங்களின் மனதில் இருந்த சிந்தனைகளை அறிந்த அந்த ஒருவர், இதையும், அதையும் மற்றதையும் செய்த அந்த ஒருவர், அவர் கூறினார், “நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.' நான் பெற்ற ஸ்நானத்தை நீங்களும் பெறுவீர்கள், இரட்டிப்பான பங்கும் வரும்." அல்லேலூயா. இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்த தேவன் எங்கே? அவர் இங்கே கான்னர்ஸ்வில், இந்தியானாவில், இந்த கட்டிடத்தை சரியாக இன்றிரவு முழுவதுமாக துடைத்துப் போட்டு கொண்டிருக்கிறார், அந்த மாறாத பரிசுத்த ஆவியானவர். அதைப்பற்றின பிரச் சனை என்னவென்றால், நீங்கள் அதை உணர்ந்து விட்டீர்கள், அவருடைய பிரசன்னம் இங்கே இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துமிருக்கிறீர்கள், ஆனால் உங்களை அதன் போக்கில் விடுவதற்கு நீங்கள் பயப்படுகிறீர்கள். ஆமென். 37. "ஆம்." "இவன் எலிசாவின் கைகளுக்கு தண்ணீர் வார்த்தவன். அவன் ஒரு உண்மையான தீர்க்கதரிசி”. ஆம், அவன் உண்மையான தீர்க்கதரிசிதான். அவன் ஒரு நல்ல நண்பனுடன் இருந்தவன். "அவனை அழைத்து வா” என்றான். எனவே அவர்கள் தங்களுடைய இரதத்தில் ஏறி, புறப்பட்டு சென்று, தீர்க்கதரிசியின் வீட்டிற்கு முன்பாக நின்றார்கள். அவன் வெளியே வந்து, ஒருவிதத்தில் அவர்களை கோபமாக பார்த்தான். அவன் சுற்றிலும் பார்த்து; அவன், “யோராமிடம் - ஏன் கூடாது. நீ ஏன் உன் அம்மாவின் தீர்க்கதரிசிகளிடம், மீண்டுமாக அங்கே அந்த பாகாலின் விக்கிரகங்களிடம் செல்ல கூடாது? நீ ஏன் அவர்களிடம் செல்லக்கூடாது? நீ ஏன் என்னிடம் வந்தாய்?” என்று கேட்டான். அவன், “நான் யோசபாத்தின் முகத்தை மட்டும் பாராதிருந்தால், நான் உன்னை பார்த்துக்கூட இருந்திருக்க மாட்டேன்” என்றான். ஒருவிதத்தில் அவன் கோபமடைந்தான், அந்த பிரசங்கியார் கோபமடைந்தார். அவர்கள் கோபமடையலாம் என்பதை நீங்கள் அறிவீர்கள். கூறினான், அவன் கூறினான், “நான் மட்டும்... நான் உன்னை பார்த்து கூட இருந்திருக்க மாட்டேன், ஆனால் இருந்தாலும், ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றான். பாருங்கள், அவனுடைய கோபம் உச்சிக்கே ஏறிவிட்டது. அவன் சாந்தமாக வேண்டியிருந்தது. இப்போது, சபையில் இருக்கும் இசையை விசுவாசிக்காத ஜனங்களே, அதைப்பற்றி என்ன? அந்த சுரமண்டல வாத்தியக்காரன் வாசிக்க ஆரம்பித்தபோது, ஆவியானவர் அந்த தீர்க்கதரிசியின் மீது வந்தார். பாருங்கள்? தீர்க்கதரிசியின் மீது ஆவியானவர் வருவதற்கு இசையானது உதவியிருக்குமானால், பின்பு இன்றிரவும் அது அதே காரியத்தை தான் செய்யும். எலியாவின் ஆவி... 38. இப்போது, என்னால் அதிகமான இசையை வாசிக்க முடியாது. என்னிடம் பத்து நரம்புகள் கொண்ட கருவியிருக்கிறது, ஆனால் அதைக் கொண்டு என்னால் முடிந்த அளவுக்கு சிறந்ததை என்னால் செய்ய முடியும், அப்படியாக. [சகோதரன் பிரன்ஹாம் தன் கைகளை தட்டுகிறார்]. நல்லது, “நான் ஒரு தீர்க்கதரிசி அல்ல” என்று நீ கூறலாம். அப்படியானால் அந்த கருவிகளில் ஒன்றாய் இரு. எங்கேயாவது கொஞ்சம் சையை வாசியுங்கள். எதையாவது செய்யுங்கள். கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் வந்தார். ஆவியானவர் வந்தபோது, அவன் காரியங்களை காண ஆரம்பித்தான். ஒரு தரிசனம் வந்தது. அவன் சுற்றிலும் பார்த்து; அவன், “கர்த்தர் உரைக்கிறதாவது” என்றான். அங்கே சென்று, வாய்க்கால்களை தோண்டுங்கள், நீங்கள் எந்த காற்றின் சத்தத்தையும் கேட்கமாட்டீர்கள் அல்லது மழையையும் காண மாட்டீர்கள். ஆனால் கர்த்தர் உரைக்கிறதாவது, அந்த வாய்க்கால்கள் தண்ணீரினால் நிரப்பப்படும்.” சகோதரனே, நான் உன்னிடம் கூறுகிறேன், அவர்கள் தோண்ட ஆரம்பித்தார்கள். சரியாக அந்த பாலை வனத்தில். அங்கே எந்த மழையும் வரப்போவதில்லையே, அது எப்படி வரப்போகிறது? அதை பார்த்துக்கொள்வது தேவனுடைய வேலையாயிருக்கிறது. வாய்க்கால்களை தோண்டுவது உன்னுடைய வேலையாயிருக்கிறது. அது சரி. 39. அவர்கள் தோண்ட ஆரம்பித்தார்கள். அவர்களில் சிலர், "தோண்டும் கருவி என்னிடம் இருக்கிறது” என்றார்கள். நீ எவ்வளவு ஆழம் செல்கிறாயோ, அவ்வளவு அதிகமான தண்ணீரை நீ பெறப்போகிறாய். இன்றிரவும் அது அப்படி தான் இருக்கிறது. சில வாய்க்கால்களை தோண்ட ஆரம்பியுங்கள், அப்போது பரிசுத்த ஆவியானவரால் அதினூடாக பயணிக்க முடியும். அந்த பாலைவனத்தில், மோசேயின் நாட்களில் அடிக்கப்பட்டிருந்த அந்த கன்மலையிலிருந்து அந்த தண்ணீர் புறப்பட்டு வந்தது. அது இன்னும் அங்கேதான் இருந்தது. அது இன்னும் இன்றிரவும் இங்கேதான் இருக்கிறது, இஸ்ரவேல் பிள்ளைகள் தங்கள் தாகத்தை தீர்த்துக்கொண்ட அந்த மாறாத கன்மலை. அவர்தான் அந்த கன்மலையாயிருந்தார். “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அழிந்து போகாமல் இருப்பதற்காக, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்." அழிந்து போய்க்கொண்டிருந்த ஜனங்கள், அந்த அடிக்கப்பட்ட கன்மலையினால் ஜீவித்தார்கள். இன்றிரவும், அழிந்துகொண்டிருக்கும் ஜனங்களுக்கு, அவர்தான் அந்த அடிக்கப்பட்ட கன்மலையாய் இருக்கிறார், ஜீவிப்பதற்கென்று இருக்கிற ஒரே ஒரு நம்பிக்கை. பரிபூரணமான மாதிரி. அவர் அங்கே இருந்தார். 40. அதைக் குறித்த பிரச்சனை என்னவென்றால், நீங்கள் தோண்ட ஆரம்பித்தபோது, உங்களுக்கு தெரிய வேண்டிய முதல் காரியம், உங்கள் மண்வெட்டியை கொண்டு கடினமாக தோண்ட ஆரம்பிக்கிறீர்கள்: “பத்து சதவீதம் கொடு” என்று கூறினால். ஓ, ஓ. அதை செய்ய முடியாது. உங்களுக்கு அதிகமான தண்ணீர் கிடைக்காது. உங்களுக்கு கிடைக்கும் அடுத்த காரியம்... சகோதரனே, நீங்கள் தொடர்ந்து தோண்டிக் கொண்டே இருந்தால், தொடர்ந்து தோண்டிக் கொண்டே இருந்தால், அந்த மோசமான சந்தேகங் களையும், அந்த பழைய கழுவும் பாத்திரங்களையும், பாறைகளையும், கற்களையும், அது போன்றவை களையும் தோண்டி அப்புறப் படுத்துங்கள், அது எல்லாவற்றையும் வெளியே தூக்கி வீசும் அளவுக்கு ஆழமாக தோண்டுங்கள், அதின் வழியாக போதுமான தண்ணீர் பாய்ந்து செல்லும்படியாக செய்யுங்கள், அப்படி செய்யும் போது அவ்வப்போது உங்களால் மிக நன்றாக தாகத்தை தீர்த்துக்கொள்ள முடியும். இன்றிரவு என்னதான் காரியம்? நீங்கள் உங்கள் சபையையும் இதையும், அதையும் தாண்டி கிறிஸ்து இயேசுவுக்குள் தோண்ட வேண்டும். அல்லேலூயா. 41. அடுத்த நாள் காலையில், அவர்கள் பார்த்தபோது, அவர்கள் கொஞ்சம் தண்ணீரை கண்டார்கள். மோவாபியர்கள் பார்த்து, “அது பார்ப்பதற்கு இரத்தம் போன்றிருக்கிறதே” என்று கூறினார்கள். அவர்கள் அதினுள்... ஓட ஆரம்பித்தார்கள், அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்று விட்டார்கள் என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள். இஸ்ரவேல் ஜெயத்தை பெற்றது; அந்த நாளில் எல்லா நீரூற்றுகளையும் தூர்த்துப்போட்டு; ஒவ்வொரு நகரத் தையும் தகர்த்து; எல்லா காலங்களிலும் இருப்பதிலேயே மகத்தான ஜெயங்களில் ஒன்றை பெற்றார்கள். சகோதரனே, இன்றிரவு அந்த வாய்க்காலை உன் ஜீவியத்தில் நீ தோண்டுவாயானால், அந்த மோசமான காரியங்களை எல்லாம் உன் ஜீவியத்திலிருந்தும், இருதயத்திலிருந்தும் தூக்கி வீசுவாயானால், அதனுடைய இடம் அதல்ல, அந்த எல்லா மோசமான அவிசுவாசத்தையும், டாக்டர். இன்னார் இன்னார் சொன்னதையும் தூக்கி வீசிவிட்டு, அந்த செயல்களை நிறுத்துவாயானால்...?... [ஒலிநாடாவில் காலியிடம்]